இளையராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் இருந்து கிளம்பி, 20 வருடங்களுக்குமேல் மக்களின் நவநாகரிக ரசனை வடிவத்துக்கு ஏற்ப புத்தம் புது இசைமொழியை தருவதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார், யுவன் சங்கர் ராஜா. தன் இசையால் பலரையும் ஆட வைத்துக் கொண்டிருந்த யுவன் தற்போது 'மெட்ரோ' சிரிஷ், சாந்தினி தமிழரசன் ஜோடியாக நடிக்க, தரணிதரன் இயக்கும் "ராஜா ரங்குஸ்கி" படத்தின் புரமோஷனுக்காக தானே பாடிய ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் தரணிதரன் பேசுகையில்,
"யுவனின் எனர்ஜி எல்லோருக்கும் தெரிந்ததே, தன் துள்ளலான இசையால் அதை நிரூபித்தவர் தான் அவர். யுவன் தன் ஆன்மாவில் இருந்து இசையமைத்த அந்த புரமோஷனல் பாடலுக்கு நடனமாட துடிப்பான, உற்சாகமான ஒருவர் தேவைப்பட்டார். ஒட்டுமொத்த குழுவும் யுவனை கேட்க, அவர் நீண்ட தயக்கத்துக்கு பிறகு ஒப்புக் கொண்டார். அப்படிப்பட்ட ஒரு நட்சத்திரம் அந்த பாடலில் தோன்றி நடனமாடுவது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது"
என்றார்.
தற்போது, யுவன் இசையில் 'சண்டக்கோழி 2', 'இரும்புத் திரை', 'பேரன்பு' போன்ற படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.