''வர்ணம்'' படத்தில் மேக்கப் இல்லாமல், ஆசிரியை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மோனிகா. வர்ணம் படத்தில் தான் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட மோனிகா “முதன் முதலாக வர்ணம் படத்தில் நான் டீச்சரா நடித்துள்ளேன் அதுவும் மேக்கப் இல்லாம இந்தப் படத்துல நான் நடித்திருக்கின்றேன். டீச்சர்னா அதுக்குள்ள மெச்சூரிட்டி மேனரிசம் எல்லாம் நடிப்புல கொண்டு வரணும். அதை நான் பண்ணினபோது எனக்கு ரொம்ப புதிய அனுபவமாக இருந்த்து. டீச்சரா நான் கேமரா முன்னாடி நின்னப்போ ரொம்ப திருப்தியா, ரொம்ப சந்தோசமா, ரொம்ப பெருமையா உணர்ந்தேன்.
மொத்த ஸ்கூலுமே டீச்சரை கணக்கு பண்ண டிரை பண்ணுவாங்க டீச்சரும் ஒருத்தரை கணக்கு பண்ணுவாங்க.
அதே நேரம் கவர்ச்சி டீச்சர் இல்ல ஆனா, கவர்ச்சியும் இருக்கும் இது முழுக்க முழுக்க கமர்சியல் படம். அதனால கமர்சியல் படத்துல உள்ள எல்லாமே இதுல இருக்கும். டீச்சர்னா அவங்களும் சராசரி மனுஷங்க மாதிரி தான். என்ன வேலை செஞ்சாலும் எல்லாருக்கும் எல்லா ஆசையும் இருக்கும். சராசரியா ஒரு பொண்ணுக்குள்ள எல்லா ஆசைகளுமே அந்த டீச்சருக்கும் உண்டு. அது படத்திலயும் இருக்கும். ஆனா, படம் முடிஞ்சு நீங்க வெளிய வரும்போது அழகி மோனிகா உங்க மனசில பதிஞ்சிருப்பா. அந்த பாதிப்பை கவிதா டீச்சர் கண்டிப்பா ஏற்படுத்துவா..” என்று கூறினார்.
மோனிகாவுடன் இந்தப் படத்தில் சம்பதும் ஒரு கனமான ஒரு கதாபாத்திரத்தில நடித்திருக்கிறார். "பசங்க" படத்தினை ஒளிப்பதிவு செய்த பிரேம் வர்ணத்தையும் தனது கேமராவில் பதிவு செய்திருக்கிறார், படத்தின் பெயருக்கு ஏற்ற மாதிரியே மோனிகா உடபட படத்தில் வரும் அனைவரையுமே ரொம்ப அழகாகக் கலர்ஃபுல்லாகக் காட்டியிருக்கிறாராம்.
டைரக்டர் ராஜ் -க்கு இதுதான் முதல் படம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்குப் படத்தினைச் சிறப்பாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.