“தமிழகத்தில், கடந்த 2006ம் ஆண்டில் நடந்த மொத்த விபத்துகள் 55,145. இதில், உயிரிழந்தோர் 11,009 பேர். இறப்பு சதவீதம் 12.80 சதவீதமாக இருந்தது. இது, 2007ல், விபத்துகள் - 59,140, உயிரிழப்புகள்- 12,036 ஆகவும் உயர்ந்தது. 2008ல் விபத்துகள்-60,409, உயிரிழப்புகள்- 12,784 ஆகவும் எகிறிது.இதுவே 2009ல், விபத்துகள்-60,794, உயிரிழப்புகள்-13,746 ஆகவும், 2010ல், விபத்துகள்-64,996, உயிரிழப்புகள்-15,409 ஆகவும் உயர்ந்துள்ளன. 2010ம் ஆண்டில் இறப்பு சதவீதம், 12.10 சதவீதமாக உள்ளது. 2011ம் ஆண்டில், மார்ச் மாதத்திற்குள், 16,751 விபத்துகளும், 3,785 உயிரிழப்புகளும் நடந்துள்ளன. வாகனப் பெருக்கத்திற்கேற்ப, விபத்துகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. ”
- இது இன்றைய தினமலர் நாளிதழில் வந்த செய்தி.
இதற்கும் எங்கேயும் எப்போதும் படத்திற்கும் என்ன ச்ம்பந்தம்...? என்று கேட்கிறீர்களா..?
நிறையவே இருக்கிறது. சில நொடிகள்கூட தாமதிக்கப் பொறுமையில்லாமல் போக்குவரத்து சிக்னலை மீறி யாரோ ஒருவன் செய்கிற தவறால் எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கது என்பது தெரியுமா..?
ஒரு இடத்திற்குப் போகும் போது ஒன்று 15 நிமிடம் முன்னதாகக் கிளம்பவேண்டும் அல்லது 15 நிமிடம் தாமதமாகப்போகும் நிலை ஏற்பட்டாலும் பொறுமையைக் கடை பிடிக்க வேண்டும். அந்தச் சூழ் நிலையில் நீங்கள் இழப்பது வெறும் 15 நிமிடம் தான் ஆனால் அடுத்த 30 வருட வாழ்க்கை உங்களுக்கு அப்படியே கிடைக்கும். உங்களை நம்பி இருப்பவர்களது வாழ்வும் செழிக்கும்.
இந்திய சினிமா உலக வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு மாபெரும் சமுதாய நல்லெண்ணத்தோடு உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் எங்கேயும் எப்போதும்.
சமீபகாலங்களில் படத்தில் அஞ்சலி இருக்கிறார் என்பதே அதன் நிச்சய வெற்றிக்கு அடித்தளம் இட்டது போல் ஆகிவிட்டது. அந்த அளவிற்கு அவர் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களை அழகாகப் பிரதிபலித்துக் கொண்டு இருக்கிறார். துடுக்குத்தனமான அஞ்சலி அப்பாவி ஜெய், அப்பாவி அனன்யா- அடமண்டான ஷர்வன் ஜோடிகளின் அற்புதமான காதல் காவியம் தான் எ எ.
ஏ.ஆர்.முருகதாஸுடன் பல படங்களுக்கு இணை இயக்குனராகப் பணியாற்றிய சரவணன் கதை-திரைக்கதை-வச்னங்கள் எழுதி இயக்குனராக அறிமுகம்
ஆகும் படம் எ எ. தன் மாணாக்கனின் வெற்றியினை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் குருவின் மகிழ்ச்சி ஏ.ஆர்.முருகதாஸின் முகத்தில் தெரிகின்றது. ஆம செப்டம்பர் 16 ஆம் தேதி வெளிவர இருக்கும் எ எ படத்தினைப் பார்த்து விட்ட திருப்தியில் மிகுந்த நம்பிக்கையுடன் ஏ.ஆர்.முருகதாஸ். ஃபாக்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்து இருக்கும் எ எ வில் சத்யா என்கிற இளம் இசையமைப்பாள்ரும் அறிமுகமாகிறார். இயக்குனர் சரவணனே எழுதியிருக்கும் “மாசமா...ஆறுமாச்மா ஏங்கித் தவித்தேனே என் பூங்கொடிக்கு...” என்கிற பாடல் ஏற்கன்வே பலரின் “தோள்களை” த் துடிக்க வைத்திருக்கிறது. படம் வெளிவந்த பிற்கு இன்னும் பலரின் தோள்களையும் துடிக்க வைக்கும்.
இந்தச் செய்தியினைப் படித்து விட்டீர்களா..? அலுவலகம் செல்லும் போது - வீடு திரும்பும் போது- சுற்றுலா போகும் போது - நள்ளிரவில் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தாலும் போக்குவரத்து சிக்னலை 100% மதித்து வாகனங்களை ஓட்டுங்கள். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு புறம் இருந்தாலும் போக்குவரத்து விதி மீறல் அதனை விட அதிக எண்ணிக்கையில் நடப்பதால் தான் இந்த அளவிலான துயரச் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் மரணதண்டனையை ரத்துச் செய்யவேண்டும் என்று போராடிக் கொண்டே போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வண்டி ஓட்டு நம் சக மனிதர்களுக்கு நாமே மரணதண்டனை வழங்கிக் கொண்டிருக்கிறோம். சில சேரங்களில் நமக்கு நாமே கூட மரணதண்டனையை வழங்கிக் கொள்கிறோம்.
சிந்திப்போம்....
-விஜய் ஆனந்த்.K