இளைய தளபதி விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப்போராட்டத்தில் பங்கேற்கிறார். இதற்காக விஜய் இன்று டெல்லி கிளம்பிச் செல்கிறார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி அன்று தென்னிந்தியத் திரைப்பட வர்த்தசபையில் நடைபெற்ற தமிழ்த்திரையுலகினரின் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவான உண்ணாவிரதத்தில் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
நாளை அன்னா ஹசாரேவுடன் உண்ணாவிரதப்போரட்டத்தில் விஜய் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் இங்கே போராட்டத்தில் ஈடுபடுவார்களா என்பதை தமிழகம் ஆவலோடு எதிர்பார்க்கிறது.