ரெளத்திரம் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியின் செய்திகளை முழுமையாகப் படித்து முடிக்கும் முன்பே, வந்தான் வென்றான். ஆம் இரண்டு நாட்கள் இடைவெளியில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில், ஜீவா நடிக்கும் வந்தான் வென்றான் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட அதே மேடை, இதில் வந்தான் வென்றான் இயக்குனர் கண்ணனும், தயாரிப்பாளர் கே.எஸ்.ஸ்ரீனிவாசனும், இசையமைப்பாளர் எஸ்.தமன், கதாநாயகி டாப்சி இவர்களுடன் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா, எடிட்டர் மோகன், ஏ.எல்.அழகப்பன், இயக்குனர் சமுத்திரக்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ரெளத்திரம் மேடையில் தனக்கும் , ஜீவாவுக்கும் இடையிலான நட்பின் ஆழத்தை வெளிப்படுத்திய ஜெயம் ரவியினை இந்த மேடையில் வந்தான் வென்றான் பாடல்களை பெற்றுக் கொள்ள வைத்து கெளரவப் படுத்தினார்கள். வெளியிட்டவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பாலா.
புகழ்ச்சிகள் என்றும் மாறாது, புகழ்பவர்கள் கூட கிட்டத்தட்ட மாற மாட்டார்கள். ஆனால் புகழப்படுவர்கள் மாறிக் கொண்டே இருப்பார்கள். அது காலத்தின் கட்டாயம். அந்த வகையில் தயாரிப்பாளரின் நாயகன், இயக்குனர்களின் நாயகன் முக்கியமாக விநியோகஸ்தர்களின் நாயகன் என்கிற புகழ்ச்சி வார்த்தைகளுக்கு ஜீவா சொந்தக்காரர் ஆகிப்போனார்.
வந்தான் வென்றானில் நடிகர் நந்தாவும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சந்தானத்தின் சரவெடி காமெடியும் இருக்கிறது.
கேமராமேன் பி.ஜி.முத்தையாவும் தன் பங்குக்கு மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறார்.
நா.முத்துக்குமார், யுகபாரதி, தாமரை, கார்க்கி ஆகியோர் எழுதி எஸ்.தமனின் இசையமைத்தப் பாடல்கள் ஜீவாவுக்கு நிச்சயம் தொடர் வெற்றிகளைக் கொடுக்கும் என்பது உறுதி.
இயக்குனர் கண்ணனுக்கு வந்தான் வென்றான் பாடல்கள் வெளியிடப்பட்ட நாள், அவர் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நாளாக ஆகிப்போனது. ஆம் , அவரது பிறந்த நாளான ஜூலை 21 ல் வந்தான் வென்றான் பாடல்கள் வெளியிடப்பட்டது மட்டுமல்லாமல், காளிகாம்பாள் கோயிலின் வெற்றி மாலை இயக்குனரைக் கண்ணனைத் தேடி வந்தது குறிப்பிடத்தக்கது. சத்ரபதி சிவாஜிக்குப் போரில் வெற்றிகளைக் குவிக்க ஆசிர்வதித்த காளிகாம்பாள் வந்தான் வென்றானையையும் வெற்றி பெறச் செய்யட்டும்.
Read Rowthiram Audio Launch news at
http://www.mysixer.com/?p=12060 this link
[nggallery id=263]