சென்ற ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படமாகக் கருதப்பட்ட விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவுக்கு இன்னொரு பரிணாமத்தைக் கொடுத்தது. சிம்பு- கெளதம் வாசுதேவமேனனின் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. இதற்கிடையே விண்ணைத்தாண்டி வருவாயா 2 ஐப்பற்றிய பல்வேறு செய்திகள் கற்பனைகளாக உலாவருகின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா 2 இன்னும் முடிவாகாத நிலையில், அந்தப்படத்தின் படப்பிடிப்புகள் நவம்பர் 2011 ல் ஆரம்பமாக இருப்பதாகவும் எமி ஜாக்சன் நடிப்பதாகவும் வரும் செய்திகளில் துளி கூட உண்மையில்லை. கெளதம் வாசுதேவ மேனன் 2012 ல் சிம்புவை வைத்து ஒரு படம் தர பேசிக்கொண்டிருக்கிறார்.அதற்கான கதை விவாதங்களில் சிம்புவுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். மறுபடியும் சிம்புவை இயக்கவிருப்பதில் தாம் பெரிதும் மகிழ்ச்சியடைவதாகக் குறிப்பிடுகிறார் கெளதம் வாசுதேவ மேனன்.