சவாலான புதிய தொழில் நுட்பமான HD SLR Camera உதவியோடு எடுக்கப்பட்ட சனிக்கிழமை சாயுங்காலம் 5 மணி திரைப்பட்த்தைப் பார்த்து விட்டு மூத்த இயக்குனர்கள் V.C.குக நாதன் , இராமநாரயணன் மற்றும் அபிராமி ராமநாதன் ஆகியோர் ஒளிப்பதிவாளரும் தயாரிப்பாளருமான SPS குகனை வெகுவாகப்பாராட்டியிரிக்கிறார்கள். திரைப்பட்த்துறையின் ஜாம்பவான்களாக விளங்கும் இந்த மூத்த இயக்குனர்களின் வாழ்த்துக்கள் தமக்கு மிகவும் ஊக்கமளித்திருப்பதாக குகன் கூறினார்.
V.C.குக நாதன் கதை,திரைக்கதை வசனத்தில் இதே தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி அடுத்த படத்தினை இயக்கவும் இந்த இளம் அணிக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனுபமிக்க V.C. குகநாதன் அவ்ர்களின் திரக்கதையும் நவீன தொழில் நுடபத்தில் தேர்ச்சி பெற்ற SPS .குகனின் இளம் அணியும் ஒன்று சேர்ந்து கொடுக்கும் திரைப்படம் நிச்சயம் திரைப்படத்துறையில் ஒரு புரட்சியினை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்பொழுதே அனைவரையும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது.