தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தில் டைரக்டர்களுக்கும், உதவி டைரக்டர்களுமாக 2,100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். அடுத்த 2 வருடங்களுக்கான தேர்தல் வடபழனியில் உள்ள இசை கலைஞர்கள் சங்கத்தில் 19.06.2011 அன்று காலை நடைபெற்றது.செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் பலர் போட்டியிட்டனர். கவிஞர் பிறைசூடன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். மாலை வரை மொத்தம் 1,279 ஓட்டுகள் பதிவானது. இரவு 7 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் முடிவுகளை ஒரே நேரத்தில் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் கருத்து தெரிவித்ததால் இரவில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இன்று காலை ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் பாரதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இயக்குனர் அமீர் செயலாளராக தேர்வானார். பொருளாளர் பதவிக்கு டைரக்டர் ஜனநாதன் போட்டியின்றி ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோரும் போட்டியின்றி ஏகமனதாக தேர்வானார்கள்.