என்கவுண்ட்டர் பண்ணப்படுகிறவர்களுக்கும் - என்கவுண்ட்டர் பண்ணுபவர்களுக்கும் இரத்தம் ஒரே ரத்தம் தான் முன்னவர்கள் கண்ட இடத்துல துப்பாக்கிக் குண்டு பட்டுச் சாகிறார்கள். பின்னவர்களுக்கோ அரசு மரியாதையுடன் ஆஸ்பிட்டலில் சிகிச்சை. இதுல யாரு நல்லவங்க..? யாரு கெட்டவங்க..?
ரத்தத்தைப் பார்த்தாலே மயக்கம் போட்டு விழும் அப்பாவிப்பையனுக்கு பலர் ரத்தத்தையும் உயிரையும் காவு வாங்குகிற தைரியம் எங்கிருந்து வருகிறது..? விடை தெரிய நீங்கள் செல்ல வேண்டிய இடம் நெல்லை சந்திப்பு.
ஒரு அதிரடியான கதையினை இமேஜ் வட்டங்களுக்கு உட்படாத முற்றிலும் புதுமுகமான நடிகர்களை வைத்து இயக்கிக் கொண்டிருக்குறார் இயக்குனர் கே.பி.பி. நவீன். தயாரிப்பாளர்களின் இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் பல படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
ரோஹித், பூஷன் ஆகிய புதுமுக கதா நாயகர்கள் நடிக்க அவர்களுக்கு ஜோடியாக மேகா நாயர், மீரா நந்தன் நடிக்கிறார்கள். இவர்களுடன் முதன்முறையாக
இயக்குனர் சரவண சுப்பையாவும்,தயாரிப்பாளர் தேனப்பனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். கேமராவிற்குப் பின்னாலும் கலங்கரை விளக்கம் பகுதிகளிலும் வலம் வந்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தேனப்பன் இனிமேல் பல படங்களிலும் வலம் வரத் தொடங்கி விடுவார். அந்த அளவுக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
முழுக்க முழுக்க தாமிரபரணி நதி பாயும் நெல்லையிலேயே படம்பிடித்திருக்கிறார்கள். பத்து லட்சம் பேர் கூடும் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 4 கேமராக்களை வைத்து முக்கியக் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.
கடந்த 30 வருடங்களாக தன் கணீர் குரலால் உலகம் முழுவதும் திரை ரசிகர்களைக் கட்டிப்போட்ட மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
நெல்லை சந்திப்பு படத்தின் இசை அனைத்து ஊர் சந்திப்புகளிலும் விரைவில் ஒலிக்க இருக்கிறது.