ஏ.வி.எம் நிறுவனம், இயக்குனர் ஆர்.குமரன் இயக்கத்தில் விதார்த் மற்றும் புதுமுக நடிகை கவிதா நாயர் ஜோடியாக நடிக்கும் முதல் இடம் என்கிற படத்தை வித்தியாசமான கதையமைப்போடு அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பல சிறப்பம்சங்களுடன் ஜனரஞ்சகமான படமாக தயாரித்து வருகிறது.
இதில் விதார்த், வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சியை தஞ்சாவூரில் உள்ள சந்தைப் பேட்டை, சவுக்குமரம், மூங்கில், கீத்துகள் அடர்ந்த வாள் பட்டறை போன்ற உண்மையான பகுதிகளில் படமாக்குவதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். ஆனால் அதற்கான சூழ் நிலை அங்கு இல்லாததால் பெரும் பொருட்செலவில் அதே போன்று பிரமாண்டமான செட்டுகள் போட்டு கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியைப் பிரமாண்டமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.
பாடல் மற்றும் காதல் காட்சிகள் மைசூர் அருகே உள்ள ஹம்பி, சிக்மங்களூர் ஆகிய இடங்களில் படமாக்கியிருக்கிறார்கள்.
படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. மிக விரைவில் முதல் இடம் தியேட்டர்களில்.
[nggallery id=204]
இன்னும் அதிகமானப் புகைப்படங்களை இந்தத் தொடர்பினில் கண்டுமகிழவும் http://www.mysixer.com/?p=10848