சி. பிலிம்ஸ் சார்பில் ஆர்.சந்திரன் தயாரித்துள்ள புதிய படம் ‘முன்னவர்’. இப்படத்தின கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் ஆர்.கே.வேல்ராஜ். இவர் இயக்குநர்கள் இளஞ்செழியன், கே.ரங்கராஜ், தினந்தோறும் நாகராஜ், எத்திராஜ், செங்கை செல்வராஜ் போன்றவர்களிடம் துணை, இணை இயக்குநராக பயிற்சி பெற்றவர்.
இப்படத்தில் புதுமுகம் சரவணன்.சி., கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கேரளாவைச் சேர்ந்த ரஞ்சுஷா என்பவர் நடித்துள்ளார். இன்னொரு கதாநாயகனாக கணேஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா நடிக்கிறார். மேலும் ஜெயக்குமார், மதி, தமிழ்மகன், தனலட்சுமி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு நந்தாஜி இசை அமைக்க, மகா, பாடல்களை தமிழ்மகன் இருவரும் எழுதி உள்ளனர். டி. மகிபாலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் பி.கண்ணன், கே.வி.மணி ஆகியோரின் சிஷ்யர் ஆவார். பிரான்சிஸ் படத்தொகுப்பு செய்கிறார். கலை – சக்தி நிரஞ்சன், நடனம் – தெய்வேந்திரன், ரமேஷ்ரெட்டி, சண்டைப் பயிற்சி - ‘மின்னல்’ முருகன், தயாரிப்பு மேற்பார்வை ஏகாம்பரம், தயாரிப்பு நிர்வாகம் – கார்த்திக்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள சிறுவாபுரி, ஜெகநாதபுரம், செங்குன்றம், திருவேலங்காடு, ஆத்தூர், எருமவெட்டி பாளையம் போன்ற இடங்களில் வசன காட்சிகள் படமாகி உள்ளது. பாடல் காட்சிகளை பொள்ளாச்சி, கொடைக்கானல் மற்றும் திருவள்ளூர் அருகே உள்ள மேக்னா கல்லூரியில் பாடல் காட்சிகளை படமாக்கி உள்ளனர்.
இப்படத்தின் பாடல் இசை வெளியீட்டு விழா ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள ஏசி.திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் தமிழ்த் திரைப்பத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் இராம.நாராயணன் தலைமை தாங்கி முதல் பாடல் சிடியை வெளியிட்டார். இயக்குநர்கள் பிரபுசாலமன், ஆர்.கண்ணன், இளஞ்செழியன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மக்கள் தொடர்பாளர் சங்க தலைவர் விஜயமுரளி வாழ்த்தி பேசினார். முன்னதாக விழாவுக்கு வந்த அனைவரையும் தயாரிப்பாளர் ஆர்.சந்திரன் வரவேற்றார். முடிவில் இயக்குநர் ஆர்.கே.வேல்ராஜ் நன்றி கூறினார்.