தாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குனர் இயக்குனர் சிகரம் என்று அழைக்கப்படும் K.பாலசந்தர் அவர்களைத் தமிழ்த்திரையுலகின் மற்றொரு ஜாம்பவானான இயக்குனர் இமயம் பாராதிராஜா தலைமையிலான இயக்குனர்களும், கேபி அவர்களின் கண்டுபிடிப்பான காதல் இளவரசன் - உலக நாயகன் கமல்ஹாசனும் தமிழக துணைமுதல்வர் மு.க.ஸ்டாலினும் கேபி அவர்கள் இல்லத்திற்கே சென்று வாழ்த்தினார்கள்.
100 படங்களுக்கு மேல் இயக்கிய கே.பாலசந்தர் இன்றும் தொலைக்காட்சித் தொடர்களை இயக்கிக் கொண்டுள்ளார். அவருக்கு மறுபடியும் ஒரு சிறந்த திரைப்படத்தினை இயக்கும் எண்ணமும் இருக்கிறது. வசந்த் முதலான இயக்குனர்களை உருவாக்கிய கே.பாலசந்தர் இன்றைய வளர்ந்து வரும் இளைய இயக்குனர்களுக்கு ஒரு மானாசீக குருவாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார்.
தாதா சாகேப் பால்கே விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ்சினிமா கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் தமிழ் சினிமாவின் “தாதா” கே.பாலசந்தரை www.mysixer.com மும் வாழ்த்துகிறது.
[nggallery id=127]