ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இந்த வருடம் வெளியான அங்காடித்தெரு திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.ரசிகர்கள், பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என்று பல தரப்பட்டவர்களின் பாராட்டையும் பெற்றது.முத்தாய்ப்பாக கோவாவில் நடைபெற்ற 41 வது உலகத் திரைப்பட விழாவில் அங்காடித்தெரு திரையிடப்பட்டு உலகளாவிய ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றது. கோவாவில் நிகழும் உலகத் திரைப்பட விழா இந்திய திரையுலகை பொறுத்தவரை மிகவும் முக்கியமான திரைப்பட விழாவாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.