Description
ஜீவா கதாநாயகனாக சிவா மனசுல சக்தி, அதனைத் தொடர்ந்து ஆர்யா கதாநாயகனாக பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் ராஜேஷ் ஹாட்ரிக் போடும் எண்ணத்தோடு உதய நிதி ஸ்டாலின் கதா நாயகனாக நடிக்க ஒரு கல் கண்ணாடி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். மூன்று படங்களிலும் கதாநாயகன் வேறு என்றாலும் எல்லாப் படங்களிலுமே காமெடிக்கு சந்தானம் இருப்பது ராஜேஷின் பெரிய பலம். ஜீவா, ஆர்யா போலவே உதய நிதி ஸ்டாலினுடனும் சந்தானத்தின் காமெடிக் கெமிஸ்ட்ரி அதிபயங்கரமாக வொர்க் அவுட் ஆகியிருப்பதாகச் சொல்கிறார் இயக்குனர் ராஜேஷ். இந்தத் டிரையலரைப்பார்த்தால் நீங்களும் அதனை ஏற்றுக் கொள்வீர்கள்.