a K.Vijay Anandh review
பேட்ட யில் மிஸ் Miss ஆன லாஜிக் Logic இதில் இருக்கிறது. அதாவது, தன் மகளுக்காக, இந்தியாவின் வருங்கால விளையாட்டு வீராங்கனைக்காக மும்பை வில்லன்களை அடித்துத் துவம்சம் செய்கிறார் தூக்குத்துரை அஜித்குமார். என்னதான் பணம், வேலை பார்க்க ஆயிரம் பேர் இருந்தாலும், டுபாக்கூர் முற்போக்கு வாதிகளின் வாழ்க்கை முறை மாதிரி ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு தனியாக வாழ்ந்துவிட முடியாது, கணவன் சுற்றம் என்று வாழ்தலே சிறப்பு என்கிற முடிவுக்கு வருகிறார் நயன் தாரா.
இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் நக்கலும் நையாண்டியுமான மதுரைக்கார அஜித் , அட்டகாசமான உடல்மொழிகளுடன் ஆச்சிரியப்படுத்துகிறார். யோகிபாபு, தம்பி ராமையா , மைம் கோபி, ரோபோ சங்கர் என்று பெரிய நட்சத்திரப்பட்டாளத்தை வைத்துக் கொண்டு முதல் பாதியை இன்னும் நேர்த்தியாகப் படமாக்கியிருக்கலாம்.
ஆளைப்போட்டாலே தூக்குத்துரையை போலீஸ் ஒன்றும் செய்யாது, ஹெல்மெட் போடாவிட்டால் மட்டும் பிடித்து அபராதம் விதித்து விடுவார்களா என்ன..? ஆனாலும், ஹெல்மெட் போட்டுக்கொண்டு சுற்றும் அஜித் குமாருக்கு ஒரு பாராட்டு.
குழந்தைகளின் மீது பெற்றோர்களின் கனவுகளைத் திணிக்கக்கூடாது என்கிற நல்ல விஷயத்தைச் சொன்ன இயக்குநர் சிவாவுக்கும் ஒரு பாராட்டு.
ஒட்டுமொத்தமாக கதையென்று பார்த்தால், யானைப் பசிக்குச் சோளப்பொறிதான் என்றாலும், குழந்தை, உறவுகள் நம் கிராமம், கலாச்சாரம், திருவிழா என்று காட்டிய விதத்தில் ஆறுதலாக இருக்கிறது.