a K.Vijay Anandh review
அரசே மதுக்கடைகளை நடத்தும்.
போதைக்கு அடிமையாகாமல் இருப்பது, தனிமனித ஒழுக்கம்.
நீதிமன்றமே 377 பிரிவை நீக்கும்.
அப்படியானால் கடவுளே இரு பாலினமாக படைத்திருக்கமாட்டாரே, என்பதை ஆய்ந்து அறிந்து, ஆண்-பெண்ணாக இணைந்து வாழ்வது, சந்ததிகள் தழைக்க உதவும்.
நீதிமன்றமே 497 ஐ நீக்கும், போலி பகுத்தறிவுவாதிகள் அதனைக் கொண்டாடுவார்கள்.
ஆனாலும், என்னதான் முன்னாள் காதலியாக இருந்தாலும் இன்று அடுத்தவன் மனைவியாகிவிட்டவள் தனது படுக்கையறைக்குள், தனது படுக்கையில் கிடந்தும் அவள் மீது துளி கூட காமம் எழாமல் பார்த்துக் கொள்வது உத்தமத்தின் உச்சம்.
கே.ராமச்சந்திரன், ஒரு உத்தமன்.
96 இன்றைய சமூகச்சூழலிலும், தனி மனித ஒழுக்க மற்றும் கட்டுப்பாடுகளோடு வாழமுடியும் என்பதற்கான சாட்சி, அப்படி வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கான, மரியாதை.
பயணப்புகைப்படக் கலைஞராக வரும் விஜய்சேதுபதி தான் அப்படியென்றால், அவரது நண்பர்கள் பகவதி, ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி என்று அனைவருமே நேர்மறையான கதாபாத்திரங்களாக வந்து மனதில் நின்றுவிடுகிறார்கள்.
பயணப்புகைப்படக் கலைஞரான விஜய்சேதுபதியின் பணி நிமித்த பயணத்தை விட, அவரது காதல் பயணம் அல்லது நினைவுகள் தான், 96.
சமூக வலைத்தளங்கள்: அறிமுகமாகும் காலத்தில் படிப்பை முடித்தவர்களுக்கு இந்தப்பிரச்சினை இல்லை, ஆனால் அப்பொழுதுதான் கம்யூட்டரே அறிமுகம் என்கிற காலகட்டத்தில் படிப்பை முடிப்பவர்கள், தங்களது நண்பர்களை நீண்ட வருடங்களுக்குச் சந்திக்க முடியாமல் போவது, இயல்பான ஒன்று.\
அப்படி 1996 இல் பள்ளிப்படிப்பை முடித்தவர்கள், இருக்கும் ஒன்றிரண்டு தொடர்புகளை வைத்து ஒன்றிணைகிறார்கள். அதிகபட்சமாக சிங்கப்பூரில் இருந்து, ஜானகி – திரிஷாவும் வந்துவிடுகிறார். இவர் ராமனை மிஸ் Miss செய்துவிட்ட, ஜானகி.
மற்ற அனைவரும் இடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றுமாக இருக்க, திரிஷா உட்பட விஜய்சேதுபதி இன்னும் கல்யாணமே செய்துகொள்ளவில்லை என்பது திரிஷாவுக்குப் பேரதிர்ச்சி. அதற்குக் காரணம், தான் தானோ என்று நினைத்து துடிக்கும் காட்சி அற்புதம்.
விஜய்சேதுபதியைப் பார்த்து திரிஷா, “உனக்கு என்னடா குறைச்சல், நீ ஒரு ஆம்பள நாட்டுக்கட்டை, உன்னை எந்தப்பெண்ணுக்குத்தான் பிடிக்காது..” என்கிற காட்சியில் கைதட்டல் அள்ளும். வெட்கத்தில் நெளியிற விஜய்சேதுபதியும் அழகு.
நாட்டுக்கட்டை என்றாலே, பெண்களைத் தான் குறிக்கும் என்கிற நிலையில், முதல் நாட்டுக்கட்டை ஆணாக, இனி விஜய்சேதுபதி அறியப்படுவார் என்றால் அது மிகையாகாது.
ஈருடல் ஓருடல் ஆகும், வயதுவந்த அல்லது வயதுக்குவந்த ரொமாண்டிக் Romantic காதல்களுக்கு மத்தியில், ஒரு அடி ஸ்கேலில் Scale அளந்தது போன்ற இடைவெளி விட்டு வளரும் கண்ணியமான பள்ளிச்சீருடை காதல் அழகு. அந்த வயது விஜய்சேதுபதியாக, ஆதித்யாவும் , திரிஷாவாக கெளரியும் மிகவும் இயல்பாக வசீகரித்துவிடுகிறார்கள்.
ஆதித்யா, படத்தில் வளர்ந்து விஜய்சேதுபதி ஆனமாதிரி, நிஜத்திலும் சரியாக முயன்றால், விஜய்சேதுபதி ஆகலாம்.
அந்த காலகட்ட கதாபாத்திரங்களில் தேவதர்ஷினியின் கதாபாத்திரம் அச்சு அசலாக அவரைப் போலவே இருப்பது சிறப்பு. வர்ஷா பொல்லம்மா, ஒரு சில காட்சிகளில் வந்து போனாலும், மனதில் நின்று விடுகிறார்.
கவிதாலாயா கிருஷ்ணனை அவ்வப்பொழுது பார்த்துக் கொண்டிருப்பதும், ஜனகராஜை நீண்ட நாட்கள் கழித்து பார்ப்பதும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
மகேந்திரன் கோவிந்தராஜ், சண்முக சுந்தரம் இருவரும் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். திரிஷாவாக வரும் ஜானகி மூலம் அடிக்கடி இளையராஜா இசையில் உருவான ஜானகி பாடிய பாடல் வரிகளுக்கு ஸ்பேஸ் Space கொடுத்து, தன்னடக்கத்துடன் இசையமைத்திருக்கிறார் கோவிந்த் மேனன் என்றால் அது மிகையாகாது.
Getting Together ஐ Living Together ஆக்கிவிடாமல், நேர்மறையாக அற்புதமான ஒரு திரைக்கதை அமைத்து இயக்கிய சி.பிரேம்குமாரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
96, காதல் நினைவுகள், ஒவ்வொருவரின்….