a K.Vijay Anandh review
அசைக்க முடியாத ரஜினி ரசிகர் மன்ற தலைவர் முருகன், பக்கத்துத் தெரு அமுதாவின் மேல் கொள்ளும் காதல் தான் அழகென்ற சொல்லுக்கு அமுதா.
பட்டிமன்ற ராஜாவுக்கு ஒரு வெட்டி மகனாக நடித்திருக்கும் சுரேஷ், தனது அப்பா, அம்மா மற்றும் நண்பர்களுடன் அடிக்கும் அலப்பறை தியேட்டரில் சிரிப்பு தெறிக்கும் ரகம்.
பார்த்தவுடனே ஆர்ஷிதா மேல் வரும் காதலும் அவரைத் துரத்தி துரத்தி செய்யும் சுரேஷின் விடா முயற்சி கடைசியில் விஸ்வரூப வெற்றி தருகிறது.
மற்ற உள்ளுர் நடிகர்களுடன் போட்டி போட்டு ஆர்சிதாவும் பக்கா சென்னைப் பெண்ணாக வந்து கொள்ளை கொள்கிறார்.
லலிதானந்த், முகிலன், சினேகன் ஆகியோரின் பாடல்கள் ரஜின் மகாதேவ் இசையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன.
ஜெ. மறைவையொட்டி வெளியாகி சரியான முறையில் ரசிகர்களைச் சென்றடையாத நிலையில், இப்பொழுது மறுபடியும் வெளியாகியிருக்கின்றது.
அறிமுக இயக்குநர் நாகராஜன், அட்டகாசப்படுத்தியிருக்கிறார்.