a K.Vijay Anandh review
இன்னும் சில.நாட்களில் இஷா தல்வாரை கரம்பிடித்து மணவாழ்க்கைக்குள் நுழையப்போகும் வங்கி ஊழியர் ஆர் ஜே பாலாஜியை, மருத்துவக்கல்வி நிலைய ங்களில் உயர்கல்வி வியாபாரத்திற்காக அப்பாவி மாணவர்கள் பலியாவதை துப்பு துலக்கும் அளவிற்கு கொண்டு போய் நிறுத்துகிறது, இயற்கை.
பிரான்ஸிஸ் ராஜா ஜோ மல்லூரி டீனாக இருக்கும் ஒரு கிறுத்துவ மருத்துவக்கல்லூரியில் இப்படி ஒரு மொள்ளமாரித்தனம் நடக்கிறது என்பதை காட்டவே துணிச்சலும் நேர்மையும் வேண்டும். அது இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமாருக்கு நிறையவே இருக்கிறது போலும்.
ஆதரவற்ற ஏழை மாணவர்களை அந்த கல்வி நிறுவனம் எப்படி காவு வாங்குகிறது என்பதை ஆர் ஜே பாலாஜி துப்புதுலக்குவதன் வாயிலாக அறியும் போது பகீரென்றிருக்கிறது.
Solo ஹீரோவாக ஸ்கோர் செய்ய ஒரு வாய்ப்பு, இவர் யார் எதுக்கு நம்ம காரில் ஏறியிருக்கிறார் என்கிற பதட்டத்தில் ஆரம்ப காட்சியில் நாலஞ்சு வார்த்தைகள் கத்தி பேசினாலும் கிளைமாக்ஸ் வரை அவருக்கு அதிகம் வசனங்களே இல்லை என்பது ஆச்சிரியம்.
நிமிடத்திற்கு நானூறு வார்த்தை பேசும் ஆர் ஜே பாலாஜியை மொத்த படத்திலும் 40 வார்த்தை மட்டுமே பேசவைத்ததே பெரிய விஷயந்தான். நடிப்பில் இன்னும் கொஞ்ச மெனக்கெடலும் வசன உச்சரிப்பில் ஒரு ஒழுங்கும் இருந்துவிட்டால் போதும் ஆர் ஜே பாலாஜியும் மாஸ்ஹீரோ தான்.
ஐஸ்வர்யா ராஜேஷ் குறைவாகவே வந்தாலும் நிறைவாக நடித்துவிடுகிறார்.
சாம் சி எஸ் பின்னணி இசையில் கொஞ்சம் சொதப்பியிருப்பது நன்கு தெரிகிறது.
பலான வீடியோக்களாக எடுத்து வைத்திருக்கும் பலசரக்கு கடைக்காரர் ஜார்ஜ் , பாலா ஆகியோரிடம் காவல்துறை அதிகாரி தமிழ் விசாரணை செய்யும் காட்சிகள் சுவராஸ்யம்.
ஒரு சிறிய நூல் கிடைத்தால் கூட நேர்மையாம புலன்விசாரணையில் யாரும் தப்பித்துவிடமுடியாது என்பது நம்பிக்கையளிக்கிறது.
Run Baby Run நன்றாக ஓடத்தகுதியான திரில்லர்.