a K.Vijay Anandh review
ஒரு கடத்தல், இருவேறு இடங்களில் நடக்கும் காட்சிகள் ஒரே ஸ்கிரீனில் கிளைமாக்ஸில் ஒரே காட்சியாக படம் நிறைவுபெறுகிறது. இந்தவகை பாடங்களில் இந்தியாவிலேயே இது தான் முதல்படம், அதுவும் நமது தமிழில்.என்கிற வகையில் 5/5.
வினோத் கிஷனிம் கதாபாத்திர வடிவமைப்பு தான் இப்படம் Split Screen வகையாக இருக்கவேண்டும் என்று இயக்குநர் ஜெகன் விஜயாவை முடிவுசெய்ய வைத்திருக்கவேண்டும். ஆட்டிசமா அல்லது வேறு ஏதாவதா என்பது தெரியாத அளவிற்கு ஒரு பச்சைக்குழந்தையாக பேசிக்கொண்டே இருக்கிறார் பாலசுப்ரமணியாக வினோத் கிஷன். இவருக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் அதையும் தாண்டி இப்படம் சரவதேச விருதுகளையும் அள்ளும்.
இன்னொரு பக்கம், கெளரியின் பேஸ்புக்கில் இருக்கும் சச்சினால் ஒரு தலைக்காதலாக கடத்துப்பட்டு சிறைவைக்கப்படும் கெளரி, 96 ல் பரமசாதுவாக நடித்தவர் இதில் ஒரு புலி போல் நடித்திருக்கிறார். தப்பிக்கப்போராடுவது, கிடைத்த ஒரே ஒரு வாய்ப்பிலும் மூளைவளர்ச்சி குன்றிய ஒருவரிடம் போனில் மாட்டிக்கொண்டோமே என்பதறிந்து விரக்தி, கோபம், எரிச்சல் அப்புறம் சாந்தம் என்று மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்.
வினோத்தின் தாயாக வரும் ரோகினி, நிறைவாக நடித்திருக்கிறார். லகுபரன், பாலா ஆகியோர் ஒரு சில காட்சிகளிலேயே வந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
சச்சின், கெளரியை சம்பவம் செய்திருக்க வேண்டுமா? சும்மா ஒரு முத்தம் கொடுத்திருந்தால் மட்டும் போதாதா? என்று நினைக்கத்தோன்றியது, ஆனால் அதை நேரடியாக காட்சிப்படுத்தாத வகையில் ஒரு ஆறுதலாகவும் இருந்துவிட்டது எனலாம்.
சினிமாவுக்கு எடுத்துட்டு உள்ளே போய் படமும் பார்த்துக்கொண்டு மொபைலையும் நோண்டிக்கொண்டு வெட்டி மல்டி டாஸ்க்கில் இருக்கும் ரசிகர்களையும் ஹெல்தி மல்டி டாஸ்க் கிற்கு தயாராக்கும் வண்ணம் ஒரு திரை இரு காட்சிகள் என்று ஒரு சைக்காலஜிகல் டிரீட்மெண்ட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன் விஜயா.
பிகினிங், மற்றுமொரு நல்லாரம்பம் தமிழ்சினிமாவில்.