a K.Vijay Anandh review
வயதுக்கு வந்தவுடன் படிப்பு நிறுத்தப்பட்டு அடுத்த சில மாத ங்களில் அல்லது சில வருடங்களில் வீட்டுவேலைக்கான பயிற்சி கொடுக்கப்பட்டு 18 வயதிற்குள் திருமணம் செய்துவைக்கப்படும் இளம் சிறுமிகளை பற்றிய தொடர் அயலி.
இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டு எப்படியாவது மேற்படிப்பு படிக்கவேண்டும் என்று வீட்டிற்குள்ளும் சமூகத்திற்குள்ளும் போராடும் தமிழ்ச்செல்வி - அபி நட்சத்திரா கதாபாத்திரத்தை ஒரு மென்மையான பாத்திரமாக பயணிக்க வைத்து, மைதிலியாக வரும் லவ்லின், கயலாக வரும் தாரா ஆகியோரை பலமான கதாபாத்திரமாக்கி குறிப்பாக மையக்கதாபாத்திரமான அபி நட்சத்திராவின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பது போல அமைத்து, மூன்று பேரின் தாய்மார்களையும்.களத்தில் இறக்கிவிட்டு ஒரு அட்டகாசமான தொடராக எழுதியிருக்கிறார் வீணை மைந்தன்.
முதல் எபிசோடிலேயே, டீன் ஏஜ் அதாவது பதினெட்டு வயது முடிவதற்குள்ளாக பிள்ளையும் கையுமாக வாயும் வயிறுமாக மருத்துவ செக்கப்புக்காக வரிசையில் நிற்கும் தாய்மார்கள், அட குழந்தைகள் தாம்பா.. அந்த ஒரு ஷாட்டிலேயே இந்த தொடரின் போக்கை ஒரு முன்னோட்டமாக காண்பித்து அட்டகாசப்படுத்திவிடுகிறார் இயக்குநர் முத்துக்குமார்.
சினிமாக்களில் சின்ன சின்ன வேடம் ஏற்று வந்தாலும் கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக நடித்து பெயர் வாங்கிவிடும் அபி நட்சத்திராவிற்கு இத்தொடர் மிகப்பெரிய திருப்புமுனை தொடராக இருக்கும் என்றால் அது மிகையல்ல.
வயதுக்குவருவதற்கு முன் ஒரு குழந்தைத்தனம், வந்தபிறகு அம்மாவையே அதட்டி அதகளம் பண்ணும் ஒரு முதிர்ச்சி, அம்மாவை மட்டுமல்ல, சக தோழியரையும்.ஊக்குவித்து அந்த ஊரையே மாற்றும் கனமான பாத்திரம். அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
முதல் விக்கெட்டாக மைதிலியாக வரும் லவ்லின், நொட்டுவ... என்கிற வசனத்தை அடிக்கடி உச்சரித்து அப்படியே ஒரு கிராமத்து சிறுமியாகவே வாழ்ந்திருக்கிறார். டீன் ஏஜ் முடிவதற்குள்ளாக கையிலும் வயிற்றிலும் குழந்தையை சுமந்துகொண்டு புருஷன் செத்த இடத்தில் கையில் பால் செம்பை வைத்துக்கொண்டு நான் என்னம்மா செய்யனும்னு அப்பாவியாக அழுது வெடித்து கேட்கிறாரே அப்பொழுது நிச்சயம் அந்த அழுகை நமக்கும்.ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே பயணப்பட்டு வந்து, கடைசி 2 எபிசோடுகளில் தமிழின் அறிவுரை கேட்டு அம்மாவையும் ஊரையும் ஆட்டிப்படைக்கும் கயலாக தாரா, சிறப்பாக.நடித்திருக்கிறார்.
இந்த மூவரின் அம்மாக்களாக முறையே அனுமோல், காயத்ரி ஐயர் அப்புறம் தாராவின் அம்மாவா வருபவர் என்று அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். அனுமோல், அப்பாவி அம்மாவாக வந்தாலும் குழந்தைக்கு அரணாக நிற்கிறார் என்றால், கண்டிப்பு கண்டிப்பு என்று காயத்ரி ஐயரும்.ஒரு பக்கம் வசீகரிக்கிறார். இருவரையும் ஒரே எபிசோடில் தூக்கிசாப்பிடும் தாராவின் அம்மா, தன் மகளுக்கு பஞ்சாயத்தில் மொட்டை போட்டு அசிஙகப்படுத்திவிடுவார்களோ என்று துடிக்கிற துடிப்பில் கிராமத்து வெள்ளந்தி அம்மாவை கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறார்.
இது பெண்குழந்தைகளுக்கான படம் தான், ஆனாலும், கதையோட்டத்திற்கு அருவி மதன், லிங்கா, சிங்கம்புலி குறிப்பாக வாத்தியாராக வரும் டி எஸ் ஆர் சீனிவாசன் என்று அத்தனை பேரும் சிறப்பாக வலுசேர்த்திருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியாராக வரும் சீனிவாசனும் லிங்காவின் அப்பாவாக வரும் சிங்கம்புலியும்.
வயதுக்கு வருவது, மாதவிடாய், குழந்தைந்திருமணம் இதை இவ்வளவு நேர்த்தியாக விளக்கமாக துளி ஆபாசம் இன்றி ஒரு பாடமே நடத்தியிருக்கிறார்கள். அத்துடன், இறை நம்பிக்கைதையும் இணைத்து, சர்ச்சைகள் கிளம்பிவிடாதபடி ஜாக்கிரதையாக கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு ராம்ஜி கேட்கவும் வேண்டுமா? கொஞ்சம் பசுமையும் நிறைய பொட்டலுமான புதுக்கோட்டை மண்ணை அட்டகாசமாக காட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ரேவா இன்னொரு இளம்பெண் இசையில் இன்னொரு சகாப்தம் என்பது போல ஒரு டிரெண்ட் செட் பண்ணியிருக்கிறார்.
அதிமுக்கியமான இன்றும் சமூகத்தில் நடக்கும் அவலத்தை மையாக வைத்து வெளிவந்திருக்கும் இத்தொடரை, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தயாரித்திருக்கிறார் குஷ்மாவதி.
15-18 க்குள் திருமணம் செய்துவைக்கப்படும் நம்.குழந்தைகள், வீட்டுவேலையும் செஞ்சுட்டு புருஷன் இன் காமவெறியையும் தீர்த்துவைத்துக்கொண்டு , செக்ஸ்வொர்கர்ஸை விட மோசமான நரகத்தை நம் வீடுகளிலேயே அனுபவிக்கிறார்கள் எனும் போது, நம் கண் முன் எக்காரணம் கொண்டும் இதுபோன்ற அவலங்களுக்கு இடமில்லை என்கிற உறுதியை நம்மையறியாமலே எடுக்க வைக்கும் தொடராக அயலி, Zee5 OTT இல் காணத்தவறாதீர்கள்.
ம