a K.Vijay Anandh review
கிட்டத்தட்ட வாரிசு அரசியலுக்கு எதிராக ஆரம்பித்து பின் வாரிசு அரசியலே சரி என்பதாக முடிகிறது, வாரிசு படம்.
இதில் சரத்குமாரின் அசல் வாரிசுகள் தோற்றுப்போக அல்லது எதிரியிடம் விலைபோக அவரது சாம்ராஜ்யத்தில் பணிபுரியும் விஜய் எல்லா பிரச்சினைகளையும் முறியடித்து ஜெயித்து தன் கடமையை செய்தேன் எனும் போது இல்லை இல்லை பெற்றால் தான் வாரிசா இனி இந்த சாம்ராஜ்யத்திற்கு நீ தான் வாரிசு என்பதாக அமைந்திருந்தால் இது புதிய கதையாக அமைந்திருக்கும், கிட்டத்தட்ட பேர் சொல்லும் பிள்ளை மாதிரியாவது.
மற்றபடி, குடும்ப ங்கள் கொண்டாடும்.வெற்றி என்று குசும்பாக விஜய் பேசும் வசனம் உட்பட பல இடங்களில் காதலியுடனும், காமெடியனுடன் ஏன் வில்லனிடமே வளைந்து நெளிந்து பேசும் அத்தனை வசன ங்களிலும் விஜயின் குறும்புத்தனம் கலந்த ஒரு விதமான ஸ்டைல் ரசிகர்களை மெஸ்மெரைஸ் செய்கிறது. அறிமுக பாடல், ராஷ்மிகாவுடன் இரண்டு பாடல்கள், குடும்ப விழாவில் ஒரு இசைக்கு என்று ராக்கெட் வேகத்தில் விஜயும் ஆடி உடன் ஆடுபவர்களையும் ஆட வைத்திருக்கிறார்கள்.
வாரிசு என்பதாலேயே பவர்ஃபுல் சேரில் உட்கார்ந்தால் பவர்ஃபுல் மனிதராக நிர்வாகியாக ஆகிவிடமுடியாது. இது வெறும் சேர் தான் பவர்ஃபுல் மனிதன் உட்கார்ந்தால் தான் அந்த சேருக்கு மரியாதை என்பதாக விஜய் பேசும் வசனம் நச்.
பல இடங்களில் புஷ்பா அல்லு அர்ஜுனை நினைவுபடுத்துகிறது விஜயின் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகள்.
ஏன் விஜயை பற்றி இவ்வளவு என்றால், டைரக்டரும் விஜயை தவிர வேறு எதுவும் தேவை இல்லை என்று முடிவு எடுத்தே இப்படத்தை இயக்கியிருக்கிறார் போல. எந்தளவுக்கு என்றால் தெலுங்கில் முன்னணி நாயாகியான ராஷ்மிகா மந்தனாவை கூட ஜஸ்ட் லைக் தேட்டாக வந்து போக வைக்கும் அளவிற்கு!
விஜயின் அண்ணன் மகளை ஆண்டனி குரூப் கடத்த, விஜய் அவனை தேடிப்போய் மீட்கும இடங்களில் ஆலய திருப்பணிக்குழு போஸ்டரை அநியாயத்திற்கு போகஸ் செய்திருப்பது ஏனோ?
காசியில் வந்து காரியம் செய்யும் வெளி நாட்டு கிறுத்துவனே நெற்றிய நிறைய திருநீறு அணிந்துகொள்ளும் போது, உள்ளூர்க்காரய்ங்க முன்று பேரும் டச் அப்போடு நிற்பது அசி ங்கமாக இருக்கிறது.
அதென்னங்க அந்த சுர ங்க பின்னணியில் வரும் பாடல் ஒன்றில் KGF super hero யஷ் ஷின் டூப் போலவே ஒருத்தரை ஆட வைச்சுருக்கீங்க?
நிஜ அப்பாவின் 80 ஆம் கல்யாணத்தில் கலந்துகொள்ளாத நிஜ விஜய், சினிமாவில் அப்பா சரத்குமாரின் 60 ஆம் கல்யாணத்தை நடத்தி வைக்கவே ஊர் திரும்புவது, நிஜத்திலும் நிழலிலும் ஒரே காலகட்டத்தில் இவை நடந்திருப்பது காலத்தின் கோலம்.
No Family is Perfect, But We have one family , இந்த வசனம் வீட்டிற்கும் நாட்டிற்கும் பொருந்தும். பிறரை தோற்கடிக்கவும் ஜெயிக்கவுமென்றே வாழாமல் அவரவர் வாழ்க்கையை அழகாய் வாழ்வோம் என்பதாக படத்தை முடித்திருக்கிறார்கள்.
முதலிலேயே சொன்னது போல, திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த வாரிசின் வெற்றி வேற லெவல் வெற்றியாக இருந்திருக்கும்.