a K.Vijay Anandh review
தப்பு பண்ணவய் ங்களை விரட்டி விரட்டி அடித்தோ அல்லது துப்பாக்கியால் சுட்டு கொல்வது தான் இதுகாறும் நாம் பார்த்த படங்களின் கிளைமாக்ஸ். ஆனால், இதில் தப்பு செஞ்சவய்ங்க அடுத்த தப்புக்கான சந்தர்பத்தை எதிர்பார்த்து புன்னகையுடன் காத்திருக்கிறார்கள், கிளைமாக்ஸில். அப்போ, தண்டனை கொடுக்கப்பட்டவய்ங்க..? அதை விசாரிக்கத்தான் மனித உரிமை கமிஷனர் வரலட்சுமி சரத்குமார் வர்றாங்க.
கொன்னுட்டீங்க அமுதவாணன், மிகவும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களையும்.நேர்த்தியாக கையாண்ட விதம் என்று இயக்குநருக்கு மிகப்பெரிய் பாராட்டுகள் முதலில்.
சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னா ஆட்சியை கலைச்சுடுவாய்ங்களோ என்று பயந்து சந்தடிச்சாக்கில் கிடைக்கும் ஐந்து அப்பாவிகளை போலி என்கவுண்டர் செய்வதும், விசாரணை கமிஷனில் ஒவ்வொருவரின் கோணத்தில் அதனை வரலட்சுமி விசாரித்து தெரிந்துகொள்வதும் அருமை.
அப்பாவியாக மாட்டிக்கொள்ளும் ஐந்து இளைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கம் போல, கிரைம் சம்பவத்தை ஒவ்வொருவராக நடித்து காட்டும் காட்சிகள் அழகு.
வரலட்சுமி சரத்குமாருக்காகவே எழுதப்பட்ட கதைப்போன்று இதுவரை இல்லாத அளவிற்கு இப்படத்தில் வாழ்ந்திருக்கிறார்.மொத்தமாகவே இரண்டு சேலைகள்.தான், பெரிய ஒப்பனைகள் இல்லை, பக்கம்.பக்கமாக வசனங்கள் இல்லை, ஆனால் வரலட்சுமியிடம் தெரியும் அந்த கம்பீரம், தாய்மை எல்லாமே அட்டகாசம்.
தொடர்ந்து பெண்கள் கோலோச்சும் படமாக இந்தவாரமும் V3 வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும், படத்தின் மையக்கதாபாத்திரமான விந்தியாவாக நடித்த பாவனா அறிவும் அழகும் ஒருங்கே பெற்ற இன்றைய தலைமுறை பெண்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். வீல் சேரில் அமர்ந்து அவர் பேசும் வசனங்கள் ஈட்டியாய் இறங்கி, இதயத்தை கிழிக்கும் ரகம்.
அவரது தங்கையாக வரும் எஸ்தர் அனில், அவரும் ஒரு முதிர்ச்சியும் கோபமும் சேர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக, அக்கா சொன்ன பெயரை என்கவுண்டர் அதிகாரி மாற்றி சொல்லுமிடத்தில் அவர் வெடிப்பதும், பெண்கள்னா 10 மணிக்கு.மேல வெளியே போகக்கூடாதுன்னு சொல்றீங்களா என்று பொங்குவதும் அருமை.
ஆடுகளம் நரைன், வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார். என்கவுண்டரோ தண்டனையோ தீர்வல்ல, வேறு தீர்வுகளை அரசு கண்டுபிடிக்கவேண்டும் என்று அவர் தழுதழுப்பது யதார்த்தம்.
என்கவுண்டர் அதிகாரி விஸ்வநாத் ஆக நடித்திருக்கும் பொன்முடி கவனிக்க வைக்கிறார்.
சிவபிரபுவின் ஒளிப்பதிவு, நாகூரானின் எடிட்டிங் மற்றும் ஆலன் செபஸ்டியனின் இசை மூன்றும் படத்திற்கு பலம்.சேர்த்திருக்கின்றன.
பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்றும் 18 வயதிற்கு கீழானவர்களுக்கு கட்டாயமாக செக்ஸ் கல்வி கொடுக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு படத்தை முடிக்கிறார்கள்.
தாசிகள் என்பது பழங்கால த்திலிருந்து நம் கலாச்சாரத்தில் இருப்பது தான்.
அதற்காக,பெண்களை ஒரு போகப்பொருளாக சந்தைப்படுத்த இயலுமா..?
பாலியல் தொழில் இந்தியாவிலேயே பல இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. பல நாடுகளில் இதுவே வருவாய் ஈட்டியும் கொடுக்கிறது.
16 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள் என்றால் எத்தனை பேர் அதாவது ஆண்கள் முயற்சி செய்துகொண்டே இருக்கவேண்டும். அதை நினைத்தால் பாலியல் தொழிலை அங்கீகரித்துவிடலாம் என்றே தோன்றுகிறது.
அதில் பெண்களுக்கு விருப்பமில்லை என்று வரும் போது என்ன செய்வது? யாருமே விரும்பி அத்தொழிலை ஏற்றுக்கொள்வதில்லையே...;
தீர்வு, அவரவர் மனங்களில் தான் இருக்கிறது.
மொத்தத்தில் V3 தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி, கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.