a K.Vijay Anandh review
இயக்குனர் ஆர் கே வி இயக்கத்தில் ஆகாஷ் பிரேம் குமார், ஏனாக்ஷி கங்குலி, புகழ், மைம் கோபி, விஜே ஆஷிக், சாம்ஸ், ப்ரியங்கா வெங்கடேஷ், அனு பிரியதர்ஷினி, மிதுன்யா, நிசார், ஸ்வப்னா, கிருத்திக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் “கடைசி காதல் கதை” ஈகோ மற்றும் பிடிவாதம் என்கிற ஆடைய கழட்டிப்போடச் சொல்லியிருக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
தொடாமல் காதலிக்கவேண்டுமென்றால், நாயகன் என்ன டி ஆரா..? 2கே கிட்ஸ் தக்காளி அத்தனை கிட்ஸையும் வெறுப்பேற்றிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு முத்தம், ஒரு கட்டிப்பிசித்தல் இல்லாத காதல் சாத்தியமா..?
தொட முயன்று, இருக்கும் காதலியும் கைகழுவ, இதெல்லாவற்றிற்கும் காரணம், ஆண் - பெண் அவயங்களை மூடி மூடி வைத்திருந்து உடல்கவர்ச்சியை தூண்டும் – உடைகள் தான் என்று விபரீத முடிவுக்கு வரும் நாயகன், அவரது நண்பர்களையும், சேர்த்துக்கொண்டு ஆதிமனிதனை போல உடைகளை கைகழுவுகிறார். எதைப்பற்றியாவது, எதுகை மோனையோடு நாலு வீடியோ போட்டால் அதை நம்பும் மக்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் எல்லையை பாதுகாக்கும் இராணுவ வீரர் கூட உடையை தியாகம் செய்ய, சரி இவய்ங்களை இப்படியே விட்டால் சமூகத்திற்கு பேராபத்து என்று முடிவெடுக்கிறார்கள்.
புதுமுகங்கள் என்று தெரியாதவாறு அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். புகழ் சினிமா காமெடியின் மீட்டரை இன்னும் தனதாக்கிக்கொள்ளவில்லை போலும். சாம்ஸ், தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிவருகிறார். இன்றைய சூழலில் இரட்டை அர்த்த வசனங்கள் தவிர்க்கப்படமுடியாதவை என்று ஆகிவிட்டது. ஆனாலும், இப்படத்தில் வரும் வசனங்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு இல்லை.
சிவசுந்தரின் ஒளிப்பதிவும் அருமை.
ஆர் கே வி, சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்திறார். புற ஆடைகள் ஒரு பொருட்டே அல்ல, அகத்தை நாம் ஈகோ போன்ற ஆடைகள் அணிந்து மூடிவைக்கக்கூடாது என்பதாக முடித்திருக்கும் விதம் அருமை.