a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, Threats to child rights – இதனை மனநல ஆலோசகர் P.ஸ்வாதி பிரியா வின் குழந்தை வளர்ப்பு பற்றிய ஆலோசனையாக ஒரு ஆவணப்படமாக இயக்கியிருக்கிறார் ஸ்ரீமன்.
குழந்தைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவது கூட ஒருவகையான குற்றம் என்பது முதல், பெரிய இடங்களில் 13 வயது குழந்தைகளை கூட பார்டி க்கு அனுப்பிவைப்பது வரை – வறுமையின் காரணமாக 10 முதல் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வேலைகளுக்காக விலைக்கு விற்கப்படும் அவலம் போன்ற பகீர் தகவல்களுடன் – பல்வேறு பிரச்சினைகளால் குழந்தைகள் கூட போதைப்பழக்கத்திற்கும் அடிமையாகிறார்கள் என்பதையும் கூறி எச்சரித்திருக்கிறார்.
இறுதியில், குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள் அதே சமயம் அவர்கள் பொறுப்புடன் நடந்துகொள்வதையும் உறுதிசெய்யுங்கள் என்று கேட்டுக்கொள்வதுடன் இந்த ஆவணப்படம் நிறைவுபெறுகிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
பெற்றோர்களும் குழந்தைகளும் அவசியம் பார்க்கவேண்டிய ஆவணப்படம் இது என்பதில் சந்தேகமில்லை.