a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, You are special.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை உடன்பிறந்தவர்களே புறக்கணித்தால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பைத்தியங்கள் என்று பரிகசித்தால் சமூகமும் அதைத்தானே செய்யும்.
துரதிஷ்டவ்சமாக 10 இல் ஒரு குழந்தை இப்படிப்பட்ட சிறப்பு குழந்தைகளாக பிறக்கின்றன. அவற்றுள் 35% குழந்தைகள் தான் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பை பெறுகின்றன.
இப்படிப்பட்டவர்கள், சிறப்பு குழந்தைகள் என்று அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் அனைத்து உரிமைகளும் இவர்களுக்கு வழங்கப்படவேண்டும். குறிப்பாக கல்வி, பயணக்கட்டணத்தில் சலுகை, இப்படிப்பட்ட குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு வருமான வரிச்சலுகை ஆகியவை வழங்கப்படவேண்டும். அப்பொழுது தான் இப்படிப்பட்ட குழந்தைகளை குடும்பாத்தாரோ அல்லது சமூகமோ புறக்கணிக்காமல் அரவணைக்க வாய்ப்பு ஏற்படும் என்கிற கருத்துடன் உணர்வுபூர்வமான காட்சிகளாக இதை இயக்கியுள்ளார், ரீனா கவுர் திலன்.
You are special, சிறப்பு குழந்தைகளை புறக்கணிக்காதீர்கள் என்கிற கருத்தை வலியுறுத்தியிருக்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You