a K.Vijay Anandh review
குழந்தைகள் உரிமை என்பதை மையக்கருவாக வைத்து நடத்தப்பட்ட ISR – 5 நிமிடக்குறும்பட போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தேர்வான 11 படங்களில் ஒன்று, மாற்றம்.
குடிக்க வந்தால் மூடிட்டு குடிச்சுட்டு போகனும், அங்கே வேலை பார்க்கிற சின்ன பசங்களுக்கு அறிவுரையெல்லாம் வழங்கிகிட்டு இருக்கக்கூடாது. அப்புறம் அவனும் கேட்பான்ல, “ சார் இந்த மாதிரி தினமும் நீங்களும் குடிச்சுக்கிட்டு இருந்தா .. என் பிரண்டு உங்க மகன் சாயும் இப்படித்தான் என்னமாதிரி பார்ல வேலை செய்யனும்..” என்று.
அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தால் குழந்தையுடன் நேரம் செலவிடவேண்டும், முடிந்தால் பள்ளிக்கு நாமே அழைத்து செல்லவும் வேண்டும்.
அருமையாக மாற்றத்தை இயக்கியிருக்கிறார் UTS ரமேஷ். சையத இர்பான் எனும் சிறுவன் ஜெகனாகவும், ஸ்ரீவித்யா எனும் சிறுமி சாய் என்கிற சிறுவனாகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஷானின் ஒளிப்பதிவு, அருள்ராஜ் பன்னீர்செல்வத்தின் எடிட்டிங்கும் அருமை.
மாற்றம், ஒரு சிறிய மாற்றம் நாட்டையும் வீட்டையும் மாற்றும் என்கிற கருத்தோடு எடுக்கப்பட்டிருக்கும் இந்த மாற்றம் குறும்படம் நிச்சயம் அதை செய்யும்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You