a K.Vijay Anandh review
பேய் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு அட்டகாசமான காட்சியை சொல்லி தயாரிப்பாளரை கவர்ந்துவிட்ட இயக்குநர் சிவா, அடுத்த மூன்று நாட்களுக்குள் முழுக்கதையையும் எழுத தனது மனைவி பிரியாவுடன் ஒரு பண்ணை வீட்டுக்கு செல்கிறார். அடுத்து படம் முழுவதும் அவர் எழுதுகிறார் – எழுதுகிறார் – ஒரு காட்சியை கூட அவரால் எழுத முடியவில்லை. அப்படி எழுத விடாமல் ஒரு அமானுஷ்ய சக்தி தடுக்கிறது. இறுதியில், அது என்ன..? கதை எழுதி முடிக்க முடிந்ததா ..? என்பதே விறுவிறுப்பான திரைக்கதை, 181.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
முற்றிலும் புதிய நடிகர்களை வைத்து கொண்டு, ஓரளவிற்கு விறுவிறுப்பாகவே படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் இஷாக். ஒரே ஒரு பண்ணை வீட்டில் வைத்து எட்டே எட்டு கதாபாத்திரங்களை வைத்து, வித்தியாசமான யாரும் எதிர்பாராத கிளைமாக்ஸுடன் 181 ஐ கொடுத்திருக்கிறார். படத்தில் மூன்று நாட்களாகியும், கதை எழுத வரும் நாயகனால் எழுத முடியாமல் தவிப்பை இரண்டு மணி நேரமாக காட்டி கதையை நகர்த்தியிருக்கும் இயக்கு நர் இஷாக், இந்த 181 பட்த்தின் முழுக்கதையையும் வெறும் 12 மணி நேரத்தில் எழுதியிருக்கிறார் என்பதை அறியும் போது , நிச்சயம் பிரமிப்பை தருகிறது. இப்படிப்பட்ட குறைந்த பட்ஜெட் விறுவிறுப்பான படங்கள் என்பது, திரையுலகம் தொடர்ந்து ஆரோக்கியமாக இயங்க வழிவகுக்கும் என்றால் அது மிகையல்ல.
நடிகர்களை பொறுத்தவரை இயக்குநராக வரும், ஜெமினி அந்த கதாபாத்திரத்திற்குரிய ஒரு அறிமுதிர்ச்சியுடன் அழகாக நடித்திருக்கிறார். அவரது மனைவியாக துறுதுறுவென்று நடித்து மனதில் நிற்கிறார் ரீனா கிருஷ்ணன். பட்த்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பேயாக வரும் காவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் அற்புதம். அவர் ஏன் அப்படி ஆனார், எனும் காட்சிகளில் காவ்யா சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியின் தம்பியாக வரும் விஜயசந்தர், இன்னும் ஒரு அடி வளர்ந்திருந்தால் அந்தக்கால ரகுமானை நினைவுபடுத்துவார்.
முக்கியமான செய்தியாக, நமது பெண்களை பாதுகாப்போம் என்கிற விஷயத்துடன் படத்தை முடித்திருந்தால், நிறைவாக இருந்திருக்கும்.
அதைவிடுத்து, இந்தியாவும் இந்தியாவில் இருக்கும் உத்திரபிரதேசம் மட்டுமே பெண் குழந்தைகள் வாழத்தகுதியில்லாத இடம் போல இறுதியில் சித்தரித்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மண்ணில் மொகலாயர்கள் வந்த பிறகு தான் பெண் வன்கொடுமை – குறிப்பாக லட்சக்கணக்கான இந்துப்பெண்கள் கற்பழிப்பு – கொலை – கட்டாய மதமாற்றம் என்று தலைவிரித்து ஆட ஆரம்பித்தது. அதன் தொடர்ச்சியாக லவ் ஜிகாத் என்கிற புதிய பரிணாமம் எடுத்து இன்றும் கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், டில்லியில் இஸ்லாமிய மதத்தை சேர்ந்த காதலனால் 32 துண்டுகளாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இந்துப்பெண்ணே அதற்கு சாட்சி. கேரளாவில் பல கிறுத்துவ பெண்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில கிறுத்துவ மதகுருமார்கள் சமீபத்தில் புகார் தெரிவித்த செய்திகளும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. நான்கைந்து ஆண்களால் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதும் பெண்மைக்கு இழுக்குதான் மதத்தின் பெயரால், ஒரு ஆண் நான்கைந்து பெண்களை திருமணம் செய்துகொண்டு மாற்றி மாற்றி புணர்வதும் பெண்மைக்கு இழுக்கு தான்.
ஒட்டுமொத்தமாக பெண்மை போற்றப்பட வேண்டும், பாதுகாக்கப்படவேண்டும் – இந்தியாவில் மட்டுமல்ல, இந்த உலகமுழுவதும்.
181- அதற்கு வித்திடுமானால் பெருமையே!