a K.Vijay Anandh review
சர்வதேச அளவில் வசூலில் பிரமாண்ட சாதனை படைக்க, 163 மொழிகள் ஒரு படம் வெளியாகியிருக்கிறது எனும்போதே அதன் பிரமாண்டமும் பட ஆக்கத்தின் நேர்த்தியும் சாமான்யனுக்கும் புரியும்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
ஜேம்ஸ் காம்ரூன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் பெரியவர்களை குழந்தைகள் ஆக்கும்.
முதல் பாகத்தில் விட்டகுறையாக, மனித இனத்திலிருந்து பண்டாரோ மக்களுடன் ஐக்கியமாகிப்போன நாவி இன மக்களோடு மக்களாக வாழும் நாயகனையும் அவனது குடும்பத்தையும் அழிப்பது தான் இந்த பாகத்தின் கதை. இவர்களது குடும்பத்தோடு வில்லனின் மகனான ஸ்பைடரும் சேர்ந்துகொண்டு சராசரி மனித இனமாகவே வளர்வது இன்னொரு சுவராஸ்யம்.
தனது ஒரு குடும்பத்திற்காக ஒட்டுமொத்த நாவி இனமும் அழியவேண்டாம் என்று முடிவு எடுக்கும் நாயகன், தனது குடும்பத்துடன் தொலைதூரத்தில், நாவி இன மக்களை லேசாக ஒத்திருந்தாலும் இன்னொரு நீர்வாழ் உயிரினம் என்று சொல்லத்தக்க இனத்துடன் தஞ்சம் புகுகிறார்.
திமிங்கலம் போல் காட்சிதரும் ராட்சச டுல்கன்களை வேட்டையாடி அதன் மூளைப்பகுதியில் சுரக்கும் – மனிதர்களின் முதுமையை தள்ளிப்போடும் ஒரு வகையான திரவத்தை – திருடும் கும்பலுடன் வரும் வில்லன், அங்கிருக்கும் நாயகனின் குழந்தைகளை பார்த்து தான் வேட்டையாட வந்த நாயகன் குடும்பமும் அங்கு தான் இருக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ள, அடுத்து நடக்கும் பிரமாண்டமான போர்கள் குறிப்பாக நீருக்கடியில் நடக்கும் சாகசங்கள் படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல.
40% மே நிஜ கதாபாத்திரங்கள் 60% மும் கம்யூட்டர் கிராபிக்ஸ்கள் தான் என்றாலும், நாவி இன மக்களும் அவர்களின் தோழமை இன மக்களும் காட்டும் உணர்வுகள் மனித உணர்வுகளை விட ஆழமாகவும் நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
10 அடிக்கு மேல் மனிதனையொத்த உயிரினங்கள் இருக்கமுடியுமா..? என்கிற கேள்விக்கு நமது இதிகாசங்களிலேயே விடையிருக்கிறது. யுகங்களை நம்மவர்கள் நான்கு பிரிவுகளாக பிரித்திருப்பது தெரியும். அந்த வகையில் முதலாவதாக வரும் யுகமான கிருத யுகத்தில் சராசரியாக 9 அடிவரை மனிதர்கள் வளர்ந்திருக்கிறார்கள். இன்னொரு சிறப்பம்சமாக, அந்த யுகத்தில் அத்தனை பேரும் அற நெறி தவறாமல் வாழ்ந்திருக்கிறார்கள். அவதார் பட்த்தில் காட்டப்படும் இயற்கையோடு ஒன்றி தாங்களுண்டு தங்களது கலாச்சாரமும் உண்டு என்று வாழும் பண்டோரா இன மக்கள் கிருத யுகத்து மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் போல என்கிற சிந்தனையை நமக்குள் விதைக்கிறார்கள்.
கிருத யுகம், 1,728,000 வருடங்களை உள்ளடக்கியது. அதனையடுத்து வரும் திரேதா யுகம், 1,296,000 வருடங்கள் கொண்டது, அதனையடுத்து வரும் துவாபர யுகம், 864,000 வருடங்களை கொண்டது, அதனை அடுத்து நான்காவது மற்றும் இறுதியாக இப்பொழுது நடக்கும் கலியுகமோ 432,000 வருடங்கள் நீடிக்கும். கலியுகம் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றது. நமது முன்னோர்கள் காலத்தை அவ்வளவு துல்லியமாக கணித்திருக்கிறார்கள். சரி, கலியுலத்தில் வாழும் மனிதர்கள் எத்தனை அடி உயரம் இருப்பார்கள்..? எப்படிப்பட்ட பண்புகள் கொண்டிருப்பார்கள் என்பதையும் நமது வேதங்கள் சொல்லியிருக்கின்றன. இந்த கலியுகலத்தில், நான்கில், ஒரு பகுதி அறநெறியுடனும் மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 வருடம் வாழலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை நிரூபிக்க, நாசா வரவேண்டுமென்பதில்லை. நாட்டு நடப்புகளை – உலக நடப்புகளை பற்றி தெரிந்தவர்களுக்கு இது புரியும்.
திரீ பிரதர் ராக்ஸ் உடன் இன்னும் இரண்டு சேர்ந்திருந்தால், பஞ்ச பாண்டவர்களை நினைவுபடுத்திவிடும்
அப்படியானால் அவதார் படத்தை, ஒரு டைம் டிராவல் படமாகவும் எடுத்துக்கொள்ள முடியும். அதாவது சம காலத்தில் இருப்பவர்களுக்கும் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களுக்குமான ஒரு மோதல் என்கிற மாதிரியும் எடுத்துக்கொள்ள முடியும்.
ஆனால், டைம் மிஷின், டைம் டிராவல் என்று எங்குமே காட்டப்படுவதில்லை.
இப்படி, முழுக்க முழுக்க நமது சனாதன கோட்பாடுகளை யொத்த அவதார் த வே ஆஃப் வாட்டர் படத்தின் தமிழாக்கத்தில் ஹலுலாயோ காடுகள் என்று ஒரு வசனம் வருகிறது. அதையும், பண்டோரா சமூகத்தை சேந்த நாயகியே சொல்வதாக வருகிறது. ஜேம்ஸ் காமரூனும் மனிதர்தானே! அந்த வார்த்தையை எந்த வார்த்தையில் இருந்து எடுத்திருப்பார் என்பது எளிதில் விளங்கும்.
163 மொழிகளில் வெளியாகியிருக்கும் அவதார் தி வே ஆஃப் வாட்டரின் தமிழ்ப்பதிப்பிறகு நமது மண்னை சேர்ந்த வசனகர்த்தா பாஸ்கர் சக்தி தமிழில் வசனம் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூத தத்துவங்களில் ஆகாயத்தையும் - முதல் பகுதியில் வரும் ஆகாயத்தில் தொங்கும் மலைகள் காடுகள் அங்குவாழும் நாவி இன மக்கள் என்று - இரண்டாவது பாகத்தில் நீரையும் - அதில் வாழும் உயிரினங்களையும் - அப்பகுதி மக்களுக்கும் கைகளில் மீன்செதில்கள் போல இருக்கிறது.- காட்டிய இயக்குநர் - அடுத்தடுத்த பாகங்களில் காற்று, நெருப்பு ஆகியவற்றை பிரதானமாக கொண்டு அவதார் தொடர்களை இயக்குவார் போலும்.
மொத்தத்தில் அவதார், பொழுதுபோக்கின் உச்சம்.