a K.Vijay Anandh review
மெடிக்கல் கிரைம் திரில்லராக வந்திருக்கிறது. மருந்து கண்டுபிடித்தால் அவற்றை சோதிக்கும் காரணிகளாக குரங்கு, எலி போன்றவை இருக்கும் காலகட்டத்தில், உலகம் முழுவதும் மனிதர்கள் மீதும் சில மருந்துகள் சோதிக்கப்படுகின்றன என்கிற படுபயங்கரமான உணமையை பயமுறுத்தும் அளவிற்கு சொல்லியிருக்கிறார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட சோதனை அப்பாவி மனிதனாக நடித்திருக்கும் அர்ஜுன், ஒரு வாரம் தான் இவரது ஆயுள் என்கிற நிலையில் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கொல்லப்படுகிறார்கள். யார் கொலையாளி என்பதை இந்தியாவின் டாப் 10 சிபிஐ அதிகாரிகளுள் ஒருவரான பிரியாமணி துப்புதுலக்குகிறார்.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
நீண்ட நாட்களுக்கு பிறகு பிரியாமணிக்கு தமிழில் ஒரு நல்ல கச்சிதமான கதாபாத்திரம், நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
கொலையாளி யாரென்று தெரிகிற அந்த யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ் அருமை.
மருந்து நிறுவனங்களுக்கு, மனித உயிர்களும் பரிசோதனை எலிகளே என்பதை அறியும் போது பகீரென்றிருப்பதை உணரமுடிகிறது.