a K.Vijay Anandh review
ராம்கி தனது சின்னவீட்டிற்காக வீடு வாங்க கொண்டு செல்லும் கணக்கில் வராத 5 கோடி ரூபாய் காணாமல் போகிறது, அதனை காவல்துறை அதிகாரி நடராஜ் துப்புதுலக்குகிறார். நடுவில் பணப்பெட்டியை ஆட்டையைப்போடும் நான் கடவுள் ராஜேந்திரன், அஸ்மிதா, சஞ்சனா சிங், இறுதியில் என்ன ஆகிறது என்பதே குருமூர்த்தி படக்கதை.
இந்தப் படத்தை கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோலில் நட்டி நடித்துள்ளார்.பூனம் பாஜ்வா பிரதான நாயகியாக நடித்துள்ளார்.நீண்ட இடைவெளிக்குப் பின் ராம்கி மறு பிரவேசம் செய்துள்ளார். ரவிமரியா, மனோபாலா ஜோடி சிரிக்க வைக்க முயல்கிறது.
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank You
தேவராஜின் ஒளிப்பதிவில் மலைப்பிரதேசங்கள் அருமையாக இருக்கின்றன. சத்யதேவ் உதயசங்கர் இசையில் வரும் குத்துப்பாடல்கள் ரசிகர்களுக்கு குதூகல விருந்தளிக்கும்.
பிரசவ வலியில் துடிக்கும் மனைவி, உடன் இருக்க முடியாமல் தன் மன நெருக்கடியை மறைத்துக் கொண்டு கடமையையே கண்ணாக எண்ணிப் பெட்டியைத் தேடும் நட்டி என சென்டிமெண்ட் கலந்து வசீகரிக்கிறார். நிறைமாதக்கர்ப்பிணியாகவே படம் முழுவதும் தமிழரசியாக வருகிற பூனம் பாஜ்வா, நிறைவாக நடித்திருக்கிறார். குறிப்பாக பிரசவ வலியில் கணவனைப் பார்க்கத் துடிக்கும் காட்சிகளிலும் பூனம் காட்டியுள்ளது நல்ல நடிப்பு.
வரி என்றாலே கிண்டல் கேலியுடன் தமிழ்சினிமாக்கள் அலறும் காலகட்டத்தில், இனிமேல், முறையாக சம்பாதிப்பேன் அதற்கு முறையாக வரிசெலுத்துவேன் என்று ராம்கி உறுதியேற்பதாக படம் நிறைவு பெறுவது ஆச்சிரியம்.
குருமூர்த்தி, போன்ற மசாலாக்களுக்கென்று ஒரு ரசிகர் கூட்டமிருப்பதை மறுப்பதிற்கில்லை!