a K.Vijay Anandh review
கொலைவெறியோடு ஒரு கும்பல் துரத்தும் ஒரு நபருக்கு லிஃப்ட் கொடுத்து மருத்துவமனையில் சேர்க்கும் அந்த மனது இந்த காலத்தில் மிகவும் அரிதாகவே ஒருவருக்கு வரும். அப்படி ஒரு உதவி செய்யப்போய் தன்னுயிரையும் இழந்து, தனது குடும்பத்தையும் துயரத்தில் ஆழ்த்திவிடுகிறார் தம்பி. அந்த துரத்தும் துயரங்களில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றுகிறார் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அதுகாறும் இருக்கும் அண்ணன் சசிகுமார்.
சுப்ரமணியபுரம் போலவே இரத்தம் தெறிக்கும் ஒரு ஆக்ஷன் படமாக நான் மிருகமாய் மாற அமைந்திருக்கிறது சசிகுமாருக்கு. அழகான குடும்பத்துடன் அமைதியாக வாழ்பவர், ஆக்ஷன் விஸ்வரூபம் எடுத்து முக்கியமான வில்லன் விக்ராந்தை வேரறுக்கிறார்.
சசிகுமாருக்கு இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் அல்வா சாப்பிடுவது மாதிரி.
போனிலேயே மிரட்டும் வில்லனாக விக்ராந்த் ஒரு மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்பானி சரத் உள்ளிட்ட சசிகுமாரின் அழகான குடும்பத்தினர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
துரத்தல்கள், கொலைகள் ஆகியவற்றை கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்பதை தவிர குறையொன்றும் இல்லை நான் மிருகமாய் மாற படத்த்தில். வாய்ப்பு கிடைக்காத வரை தான் ஒவ்வொருவரும் சாதாரண மனிதர்கள், அவர்களுக்குள்ளும் மிருகம் சிலிர்த்தெழும், அவர்களது குடும்பத்தார்க்கு ஆபத்து நேர்ந்தால் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் சத்யசிவா.