a K.Vijay Anandh review
Kindly Subscribe and Share our YouTube Channel mysixer for Tamil Cinema News - Thank you
பெண்குழந்தைன்னு என்னை ரொம்பவும் அலட்சியப்படுத்தினாங்க, எனது பெற்றோர்களுக்கு ஒரு இக்கட்டான நேரம் வந்தபோது, ஆண்குழந்தைகள் செய்ய முடியாத்தை நான் செய்து அவர்களை காப்பாற்றினேன் என்று ஒரு வாடகைத்தாய் கதாபாத்திரம் சொல்லும் போது பெண்களின் மீது மிகப்பெரிய மரியாதை ஏற்படும், இல்லாதவர்களுக்கு!
ஆறு மாதத்திற்கு ஒரு முறை அழகு சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் ஹாலிவுட் நடிகையின் மர்ம மரணம். அதைத்தொடர்ந்து இன்னொரு சூப்பர் மாடல் தொழிலதிபரின் கார் விபத்து என்று ஒரு பக்கம் விறுவிறுப்பான புலனாய்வு கதையாக ஆரம்பித்து, அதற்குள் வாடகைத்தாய் விஷயத்தை அழகாக பொருத்தி அட்டகாசமான மெடிக்கல் கிரைம் திரில்லராக யசோதாவை கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ்.
அப்படி ஒரு வாடகைத்தாயாக உள்ளே செல்லும் சமந்தா, எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டு சக வாடகைத்தாய்மார்களை காப்பாற்றுகிறார் என்பது அட்டகாசமான திரைக்கதை.
இத்தனை பெண்களையும் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளையும் நீ எப்படி காப்பாற்ற போகிறாய் என்று வில்லி வரலட்சுமி கேட்கும் போது, யசோதா, அந்த கிருஷ்ணனையே வளர்த்தவள்… இவர்களை வளர்க்கமாட்டாளா..? என்று கேட்கும் இடம் அருமை.
யசோதா, வெறும் பெயர் அல்ல, அது நம் பாரத கண்டத்து அவதார புருஷர்களுள் ஒருவரான கிருஷ்ணனை வளர்த்த ஒரு தாய். அந்தப்பெயரை முதன்மை கதாபாத்திரத்திற்கு வைத்து, மிகப்பொருத்தமான திரைக்கதை அமைத்து, அதியற்புதமான மெடிக்கல் கிரைம் திரில்லராக இப்பட்த்தை கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள்.
உன்னிமுகுந்தன், வரலட்சுமி, ராவ் ரமேஷ், முரளி சர்மா ஆகியோர் வில்லத்தனம் செய்ய, நம் சம்பத்ராஜ் குழுவினரின் போலீஸ் வேட்டை செம்ம.
இதிலும் கல்பிகா கணேஷ் ஒரு வாடகைத்தாயாக வருகிறார். பரோல் படத்தில் இருந்து என்ன ஒரு வேறுபட்ட கதாபாத்திரம்! தமிழ் ரசிகர்களும் விரும்பும் நாயகிகளுள் ஒருவராக வலம்வரப்போவது உறுதி.
ஹேட்ஸ் ஆஃப் சமந்தா என்று சொல்லும் அளவிற்கு, அப்பாவி வாடகைத்தாயாகவும் அதிரடி மங்கையாகவும் செயல்பட்டு மிகப்பெரிய ஒரு கிரைமை வெளியெ கொண்டு வருகிறார்.
இது வரை தொடர்ச்சியாக ஐந்து படங்களை எழுதி இயக்கிய இரட்டை இயக்குநர்கள் என்கிற பெருமையை ஹரி & ஹரிஷ் தட்டித்தூக்கியிருக்கிறார்கள்.
யசோதாவை குடும்பத்தோடு சென்று பாருங்கள்!