a K.Vijay Anandh review
காசியில் போய் காதலா..?
இல்லை இல்லை, பொதுவாக காசிக்கு எதற்கு செல்வார்களோ அதே காரணத்திற்காகத்தான் ஜையத் கானும் செல்கிறார். தனது நண்பர்களிடம் விட்ட சவாலுக்காக சோனல் வாழ்க்கையில் குறுக்கிட்டு அவருக்கு களங்கம் ஏற்படுத்திய பாவத்தை போக்குவதற்காக, பனாரஸ் செல்கிறார்.
பனாரஸ் என்று அழைக்கப்படும் காசி, காலபைரவர் ஆட்சிசெய்யும் இடமாயிற்றே. இரண்டாம் பாதியில் போனஸாக டைம் லூப் கான்செப்டும் ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறது.
இந்திய திரையுலகை ஆல, இன்னொரு கான் பெங்களூரில் இருந்து புறப்பட்டிருக்கிறார் என்றால் அது மிகையல்ல. அந்த கான்களின் ஆரம்ப கால படங்கள் போன்றே மனதை வருடும் அழகான காதல் கதையில், மிகவும் இயல்பாக நடித்து வசீகரித்து விடுகிறார்.
டைம் மிஷின் கான்செப் சொல்லி தனி – சோனலை வளையில் விழவைக்கும் காட்சிகள் செம்ம கியூட். சோனல், சினிமா கவர்ச்சிகள் இல்லாத இயல்பான அழகி. காசியில், கங்கை நதிக்கரைகளில் இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்கு சிறப்பான அதே நேரம் மிகவும் புதுமையான, ஆரோக்கியமான விருந்து.
தன்னுடைய அண்ணன் மகளை ஏமாற்றிய ஜையத்தை சும்மா விட்டுவிடுவாரா, உயிரில் தொழில் நுட்பத்தில் பேராசிரியராக இருக்கும் அச்யுத் குமார். அவர் காட்டும் அட்டகாசமான ஆட்டம் தான் படத்தின் இரண்டாம் பாதி.
சம்புவாக வரும் சுஜய் சாஸ்த்ரி, பீட்டராக வரும் பர்கத் அலி ஆகியோரும் அட்டகாசமாக நடித்திருக்கிறார்கள்.
நமது பொழுதுபோக்கிற்காக பெண்களை துன்புறுத்தக்கூடாது .. உள்ளிட்ட ராஜன் அகர்வாலின் வசனங்கள் படம் முழுவதுமே அழகாக அர்த்தமுள்ளதாக எழுதப்பட்டிருக்கின்றன.
அத்வைதா குருமூர்த்தியின் ஒளிப்பதில் பனாரஸ் அழகில் சொக்கிப்போகலாம். அக்னீஸ் லோக் நாத்தின் இசை அருமை.
இயக்குநர் ஜெயதீர்த்தா வின் சிந்தனையே அழகு!
பனாரஸ், பார்த்து மகிழலாம்!