a K.Vijay Anandh review
அட எதுக்கு நீ ஹாலிவுட் போகனும், நாம இங்கேயே அதைவிட சூப்பரா ஒரு படம் எடுப்போம் என்று சொல்லி எடுத்திருப்பாரோ செல்வராகவன் என்கிற சிந்தனை நானே வருவேன் முதல் பாதியில் ஏற்பட்ட்து.
அந்த அளவிற்கு, தனுஷ், சிந்துஜா, குழந்தை நட்சத்திரம் ஹியா தவே மற்றும் பிரபு ஆகியோரின் நடிப்பும், அவர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசும் வசன்ங்களும், ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் யுவன் சங்கர் ராஜாவின் மிரட்டலான பின்னணி இசையும் படப்பிடிப்பு தளங்களுமாய் பிரமிப்பை ஏற்படுத்தின என்றால் அது மிகையாகாது.
பிளாஷ்பேக், தனுஷின் சிறுவயதில் ஏற்படும் காட்சிகளும் அருமை, மிரட்டல் ரகம்.
ஒரு வாலிபனாக இந்துஜாவை திருமணம் செய்வதிலிருந்து அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகு 12 வயது ஆகும் வரையிலான காலகட்டத்தில் தனுஷ் காட்டும் உடல்மொழிகள் ஒப்பனைகள் அபாரம்.
சிந்துஜாவும், பட்த்தில் மிகவும் கொஞ்சமாகவே வந்தாலும், மிகவும் வித்தியாசமாக, அடுத்த கட்டத்திற்கு செல்ல இப்படம் அவருக்கு உதவும் என்கிற விதமாக அருமையாக நடித்திருக்கிறார்.
யோகிபாபுவின் இடத்தில் யாரைவேண்டுமானாலும் புதுமுகமாக அறிமுகப்படுத்தியிருக்கலாம், செல்வராகவன். அந்தளவிற்கு, அந்த கதாபாத்திரம் பேசும் அளவான வசனங்கள் மற்றும் உடல்மொழிகளிலேயே சிரிப்பு வந்துவிடுகிறது.
இரண்டாவது பாதியில் எல்லி அவரம் உடன் நடிக்கும் கதிர் – தனுஷ் , செல்வராகவனின் டிரேட்மார்க் சைக்கோவாக வருகிறார். அமைதியான பிரபுவாகவும் சைக்கோத்தனமான கதிராகவும் இருவேறு உடல்மொழிகளில் அற்புதமாக மிரட்டியிருக்கிறார் தனுஷ், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. சைக்கோ கதிர் – தனுஷின் கோபத்திற்கு ஆளாகி, இரு குழந்தைகளுடன் தப்பிக்க முயற்சித்து, ஒரு கட்ட்த்தில் கதிர் – தனுஷ் ஆல் கொல்லப்படும் எல்லி அவரம், முகச்சாயலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் லேசாக ஒத்துப்போவது ஏதேச்சையாக நடந்ததா..?
ஆனால், நானே வருவேன் ஐ மிகச்சிறந்த படமாக ஆக்குவதற்கு இரண்டாம் பாதி கொஞ்சம் இடறியிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
தனுஷ் ரசிகர்களுக்கு பிடிக்கலாம்!