a K.Vijay Anandh review
தமிழ் சினிமாவின் ஆர்னால்டு என்று ஆர்யாவை குறிப்பிடலாம் அந்தளவிற்கு கட்டுக்கோப்பாக உடலை வைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டும் ஆர்யா, முதன்முதலாக ஆர்னால்டு படத்தையொத்த ஒரு தமிழ்ப்படத்தில் நடித்திருக்கிறார்.
அடர்ந்த காட்டுக்குள் சட்டவிரோதமாக இயங்கும் ஆலையிலிருந்து வந்த ஆலைக்கழிவுகளில் மூலமாக தோன்றும் வித்தியாசமான உயிரினங்களுடன் போராட்டி செக்டார் 42 வின் மர்மத்தை கண்டுபிடிப்பதாக வெளிவந்திருக்கும் கேப்டன் திரைப்படம் இந்திய சினிமாவிற்கு ஒரு முன்னோடி படமாக இருக்கும் என்றால் அது மிகையல்ல.
அந்த விநோதமான உயிரினங்களை கிராபிக்ஸில் அழகாக உருவாக்கியிருக்கிறார்கள்.
கேப்டன், நம்மூர் ரசிகர்களும் காலரைத்தூக்கி கொண்டு கெத்து காட்டும் விதமாக கேப்டன் படத்தை அற்புதமான பொழுதுபோக்கு படைப்பாக இயக்கியிருக்கிறார் சக்தி செளந்தர ராஜன்.