a K.Vijay Anandh review
மேற்கத்திய சினிமாக்களுக்கு சவால்விடும் வகையில் ஆடைகுறைப்பு மற்றும் மோசமான கலாச்சார திணிப்பு ஆகியவற்றுடன் படங்களை கொடுத்துக்கொண்டிருந்த பாலிவுட்டிற்கு திடீர் ஞானதோயம் ஏற்பட்டதோ என்னவோ என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு நமோ நமோ நம நமோ நமோ நம நமோ நமஹ… என்று பாட ஆரம்பித்திருக்கிறது.
பிரம்மாஸ்திரத்தின் மூன்று பாகங்களை மெளனி ராய் தலைமையிலான தீயசக்திகள் தேட ஆரம்பிக்கின்றது. ஆராய்ச்சியாளர் ஷாருக்கானை கொன்று முதல்பாகத்தையும், ஆர்கிடெக்ட் நாகர்ஜுனாவிடமிருந்து இன்னொரு பாகத்தை அபகரிக்கவும் முயல, அவை சினிமா போல ஷிவா – ரன்பீர் கபூருக்கு காட்சிகளாக விரிய, அலியாபட்டுடன் சேர்ந்து நாகார்ஜுனாவையும், அவரைத்தொடர்ந்து குரு அமிதாப்பையும் காப்பாற்ற ரன்பீர் பயணிப்பதே பிரமாஸ்த்ரா.
குரு அமிதாப் மூலம், ரன்பீரே ஒரு அக்னி அஸ்த்ரம் என்பது வெளிப்படுவதும், அதை அவர் உணர்ந்து இறுதிக்காட்சிகளும் செய்யும் சாகசங்களும் இந்திய சினிமாவிற்கு மிகவும் புதிது.
பிரமாஸ்திரம் ஷிவா முதல் பாகம், நிச்சயம் ஒரு விஷுவல் ட்ரீட் என்றால் அது மிகையல்ல.
இதிகாசங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் கதாபாத்திரங்கள் இன்றைய காலகட்ட லைஃப் ஸ்டைலில் இருப்பது இன்னும் வசீகரித்திருக்கிறது.
இயக்குநர் அயன் முகர்ஜிக்கு ஒரு சபாஷ்!