a K.Vijay Anandh review
நாட் ரீச்சபிள், செமயான தலைப்பு. தொடர்பு கொள்ள முடியாத போன் நம்பருக்கு மட்டுமல்ல அடுத்தடுத்து கொலை செய்துவிட்ட போலீஸ் கையில் மாட்டிக்கொள்ளாமல் இருக்கும் அந்த கொலையாளியையும் போலீஸ் ரீச் பண்ணமுடியவில்லை என்பதாக கூட எடுத்து கொள்ளலாம்.
என்னதான் நாட் ரீச்சபிள் வில்லன் என்றாலும் அவனை / அவளை தன் புத்திசாலித்தனத்தால் ரீச் பண்ணுவது தானே நாயகனின் வேலை. அந்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார், விஷ்வா. அறிமுகப்படத்திலேயே கனமான கதாபாத்திரம், டைவர்ஸுக்கு அப்ளை செய்திருக்கும் தன் மனைவியும் சக காவலருமான சுபாவுடன் சேர்ந்து தன் மாமனார் அதாவது காவல்துறை உயரதிகாரி கட்டளைக்கு ஏற்ப சவாலான கேஸை சலனமில்லாமல் துப்பு துலக்கும் பாத்திரம், நன்றாகவே செய்திருக்கிறார்.
சுபாவும், ஒரு பக்கம் கணவனுடன் முறைத்து கொண்டு, அப்பாவிடம் வாங்கி கட்டிக்கொண்டு கச்சிதமாக நடித்திருக்கிறார்.
தான்யாவும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.
யாரும் ஊகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் என்றாலும் சில விஷயங்களை சினிமா மூலம் இச்சமூகத்திற்கு அழுத்தமாக சொல்லக்கூடாது என்பதை மறந்துவிடுகிறார்களோ நமது படைப்பாளிகள் என்று எண்ணத்தோன்றும் பிளாஷ்பேக்.
காமெடி என்கிற பெயரில் கொஞ்சம் அமெச்சூராக இருப்பதை தவிர்த்துவிட்டுப்பார்த்தால் நாட் ரீச்சபிளை நன்றாகவே இயக்கியிருக்கிறார் சந்துரு.