a K.Vijay Anandh review
சாயாசிங், மன்மத ராசா மன்மத ராசா பாடலுக்கு ஆடியவரா இவர் என்று ஆச்சிரியப்படும் அளவிற்கு ஒரு வெள்ளந்தியான அதேநேரம் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
பணத்தேவைக்காக, அமைச்சர் மகனுடன் ஒரே ஒரு முறை விபச்சாரம் செய்யப்போக அங்கே ரெய்டுக்கு வரும் இன்ஸ்பெக்டர் தம்பிராமையாவுக்கும் இரையாகிவிடுகிறார்.
அதெல்லாம் விஷயமல்ல, அந்த ஒரே ஒரு நாளிலேயே கருத்தரித்துவிட்ட ஒரே மகளின் மருத்துவ சிகிச்சைக்காக அவரது உண்மையான அப்பாவை தேடிப்போக வேண்டிய கட்டாயம் எழுகிறது. அந்த இருவரில் யார் அக்குழந்தைக்கு அப்பா..? சுபமாக முடிந்ததா..? என்பதே லில்லி ராணி படத்தின் திரைக்கதை.
யாருய்யா அந்த எழுத்தாளர் AK என்று தேட வைத்துவிட்டது லில்லி ராணியின் திரைக்கதை. அதை அற்புதமாக இயக்கியிருக்கிறார் விஷ்ணு ராமகிருஷ்ணன்.
முன்பே குறிப்பிட்டது போல, சாயா சிங் ஒரு பக்கம் என்றால் தம்பி ராமையாவும் அமைச்சர் மகன் மைக்கேலாக வரும் துஷ்யந்துமாக மூவரும் மூன்று வித நடிப்பில் முக்கோணத்தின் மூன்று முனைகளாக அதிகப்பட்சமாக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
நம்மள்ட்ட பேசியே வார்மப் பண்ணிக்குவான் போல... கம்பிளைண்ட் கொடுக்க வந்தா கழுத்தப்பிடிச்சு வெளியே தள்ளு... கவனிக்கிறதா இருந்தா உள்ள வரச்சொல்லு... என்று தெனாவட்டு வசனங்கள் இவருக்காக எழுதப்படுகிறதா.? அல்லது அப்படியே ஸ்பாட்டில் அள்ளிவிடுறாரா என்கிற அளவுக்கு தம்பி ராமையா பட்டையை கிளப்புகிறார்.
சொன்னாகேளுடா தம்பி.. என்று சாயாசிங் சொல்லும் போது துஷ்யந்த் கொடுக்கும் ரியாக்ஷன் தியேட்டரில் கரகோஷங்களை அள்ளும் ரகம்.
நம்மவர்கள் கிரியேட்டிவாக யோசிப்பதில் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள் இந்த லில்லியும் ராணியும்.