a K.Vijay Anandh review
ஒரு கணித மேதை, சிறுவயதிலிருந்து வஞ்சிக்கப்பட்டால் என்ன நடக்கும் என்பதை கோப்ராவாக அழகாக சொல்லியிருக்கிறார் அஜய் ஞானமுத்து.
கணிதம், நம் வாழ்வில் நம்மையறியாமல் பின்னிப்பிணைந்துவிட்ட ஒன்று. இத்தனை கிமீ வேகத்தில் வண்டி ஓட்டுகிறோம் என்று இல்லை, இவ்வளவு வேகத்தில் ஓடி, நடந்து திரும்பும் போது கூட நம்மையறியாமல் வேகம் குறைக்கின்றோம், அது தான் கணிதம்.
அந்த கணிதத்தில் சிறு வயதிலிருந்தே ஜீனியஸாக இருக்கும் விக்ரம் செய்யும் அதகளம் தான் முதல் பாதி.
தனது காதலுக்கு தடையாக இருந்தது மதி தான் என்று தவறாக நினைத்துக்கொண்டு அவரை போட்டுக்கொடுக்கும் கதிர் ஒரு பக்கம், அவர் கம்யூட்டர் ஹேக்கிங்கில் ஜீனியஸ்.
இரண்டு விக்ரம்களோடு, ஸ்ரீ நிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜ் என்று அழகான தேவதைகளாக வந்து போனாலும் ஒவ்வொருவருக்கும் கனமான பாத்திரப்படைப்பில் அசத்துகிறார்கள்.
அம்மாவாக வரும் மியா ஜார்ஜ் முதல் வில்லனாக வரும் ரோஷன் மாத்யூ என்று அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான் இண்டர்போல் ஆபிசராக அசத்தியிருக்கிறார்.
கோப்ரா, இது ஜூனியஸ் சியானின் சீற்றம்!