a KVijay Anandh review
90 களில் வெளிவந்து பெரிய வெற்றிகளை குவித்த போலீஸ் அண்டர்கவர் வகையான விஜயகாந்த் படங்களையொத்த அதே நேரம் இன்றைய ரசிகர்களுக்கும் பிடிக்கும் படியான ஒரு அற்புதமான போலீஸ் ஸ்டோரியாக பொன் மாணிக்கவேல்.
பிரபுதேவாவும் அன்றைய காலகட்டத்தில் அறிமுகமான நாயகன் என்பதாலோ என்னவோ, அந்த ஹிட் கால பார்முலாவின் நீட்சியாகவே இப்படம் இருக்கிறது.
மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு ஒரு கெளரவமான வழியனுப்பும் படமாகவும் பொன் மாணிக்கவேல் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு. பொதுவாக ஒரு கலைஞன் நடித்து மண்ணிலிருந்து விடைபெற்ற பிறகு வெளியாகும் கடைசி படம், அப்படத்தில் கடைசியாக அவர்கள் ஏற்று நடித்திருக்கும் பாத்திரங்கள் அவரை கொச்சைப்படுத்துவது போல் அமைந்துவிடக்கூடாது. அந்த வகையில், காவல்துறை அணிவகுப்பு மரியாதைக்கு ஒப்பான பொன் மாணிக்கவேலின் மரியாதையை இயக்குநர் மகேந்திரனின் ஆன்மா பார்த்து மகிழ்ந்திருக்கும். அந்தளவிற்கு ஒரு கண்ணியமான கதாபாத்திரத்தை ஏற்று மனதில் இடம்பிடித்துவிடுகிறார் மகேந்திரன்.
டி என் பி எஸ் சி எக்சாமுக்கு படிப்பது போல ஹீரோ அல்லது ஹீரோயின் கதாபாத்திரம் அமைந்தாலே அப்படம் ஹிட் தான். ஆனால், முதல்வன் படத்திற்கு பிறகு ஏன் யாருமே டி என் பி எஸ் சி எக்சாமுக்கு படிப்பதில்லை – திரைப்படத்தில் – என்பது ஆச்சிரியம்.
இதில் பிரபுதேவாவுடன் திருமணமாகியும், கணவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தும் நாயகியாக வரும் நிவேதா பெத்துராஜ், டி என் பி எஸ் சி பரிட்சைக்கு படிக்கிறார். இமான் இசையில் பார்டி பாடல் உள்ளிட்ட அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும், கமல்ஹாசனின் கைதியின் டைரி படத்தில் வரும் சூப்பர் ஹிட் பாடலான ஏபிசி நீ வாசி….. போல இதிலும், டி என் பி எஸ் சிக்கு படிக்கும் அந்த situation ஐ பயன்படுத்தி அமைந்திருக்கும் பிரபுதேவா – நிவேதா இடையிலான அந்தப்பாடல் ஸ்ரீகாந்த் ஹரிஹரன் – ஸ்ரேயா கோசல் பாடிய உதிரா உதிரா பாடல் அட்டகாசம், இவர் சும்மாவே புதுசு புதுசாக சிலபஸ் கண்டுபிடிக்கிறார், நம்ம கார்க்கிதான், இப்பாடலில் பெண்ணின் உணர்வுகளை வைத்தே அத்தனை இயல்களையும் படித்துவிடுகிறார்.
அந்த பார்டி சாங்கில், நான் நடந்தாலே கைகளை ஆட்டினாலே, கால்களை தூக்கினாலே டான்ஸ் தான் டா என்று அசத்தியிருப்பார் பிரபுதேவா.
வரிசையாக வந்துகொண்டிருந்த பிரபுதேவாவின் காமெடி ஜானர் படங்கள் ரசிகர்களுக்கு லேசாக சலிப்பு தட்ட ஆரம்பித்த நிலையில், அட்டகாசமான கமரிஷியல் வணிக மசாலாவாக பொன் மாணிக்கவேலை கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஏசி முகில் செல்லப்பன்.
பிரபுதேவா மாஸ், நிவேதா பெத்துராஜ் கிளாஸ் என்றால் இவர்களை தாண்டி அந்த பெருவளத்தான் பாகுபலி பிரபாகர் ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லனாக வரும் சுரேஷ் மேனன் உள்ளிட்டோரும் தங்களை பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
ஒரே ஒரு டயலாக்கை , இல்லை இல்லை ஒரே ஒரு எழுத்தை மாற்றிப்போட்டிருந்தால் இப்படம் மக்களிடையே சென்று சேர்ந்திருக்கும் வீச்சு அதிபயங்கரமாக இருந்திருக்கும்.நேர்மறையாகவே!
வேலையை விடும் ஐபிஎஸ் ஆபிசர் பொன் மாணிக்கவேல், “ ஆடு மேய்க்கப்போயிருக்கக்கூடாதா. என்ன..?
மற்றபடி, பொன் மாணிக்கவேல், நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு Complete Commercial Action Masala ஐ சுவைத்த திருப்தி.