கொடைக்கானலுக்கு இன்ப சுற்றுலா செல்லும் 4 பால்ய சி நேகிதர்கள், அங்கே மனைவி, மகளுடன் வரும் ஒரு டாக்டர் குடும்பத்தினருடன் நண்பர்களாகிவிடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் டாக்டரின் மகளும், நண்பர்களில் ஒருவரும் காணாமல் போக இருவருக்கும் சண்டை ஏற்பட்டு, நண்பர்கள் மூன்று பேரையும் போலீஸ் கைது செய்கிறது. டாக்டரின் மகளுடன் காணாமல் போன சி நேகிதர்களுள் ஒருவர் காட்டுக்குள் மர்மமான முறையில் இறந்துபோக கதை சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.
இந்த வழக்கை துப்பறியும் ஜான் விஜய்க்கு செக் போஸ்ட் பாதுகாவலர், கஞ்சா கடத்துபவர்கள் மீது சந்தேகம் வர , உண்மையான கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.
ஜான் விஜய், விசாரணை செய்யும் பாணி புதிதாக இருக்கிறது.
அனைவருமே பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அஞ்சலி நாயர், ஆச்சிரியப்பட வைத்திருக்கிறார். நண்பர்களாக வரும் சித்தார்த், ஶ்ரீராம் கார்த்திக் ஆகியோருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது.
போதையாம் ஏற்படும் தீங்கினை மையமாக வைத்து முழுப்படத்தையும் காட்டிற்குள் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் குமார். அவருக்கு இசையமைப்பாளர் ஜான் சிவ நேசன், ஒளிப்பதிவாளர் சாம்ராட் ஆகியோர் சிறப்பாக ஒத்துழைத்திருக்கிறார்கள்.