a K.Vijay Anandh review
மிகப்பெரிய குற்றச்செயல்களை செய்துவிட்டு சுலபமாக தப்பித்துவிடுவதற்காக ஒரு கும்பல் கால் டாக்சி புக் செய்து நடுவழியில் டிரைவர்களைக் கொன்றுபோட்டுவிட்டு கார்களை திருடுகிறது.
அவர்களின் வலையில் இருந்து நூலிழையுல் தப்பிக்கும் நாயகன் சந்தோஷ் சரவணன் தனது சக ஓட்டுநரை பலி கொடுக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தின் கதறலைப் பார்த்து அது தன்னால் தான் நிகழ்ந்தது என்கிற குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி, நேர்மையான காவலர் மற்றும் தன் சக ஓட்டு நர்கள் உதவியுடன் வில்லன்களை கண்டு பிடிப்பது தான் கதை.
சந்தோஷ் சரவணன் நாம் அன்றாடும் பார்க்கும் கால் டாக்சி ஓட்டுநராக இயல்பாக நடித்திருக்கிறார்.
நாயகியாக வரும் அஸ்வினி சந்திரசேகரும் யதார்த்தமான பாத்திரம் ஏற்றிருக்கிறார். அவர் ஒரு வக்கீல் என்கிற போது கிளைமாக்ஸில் வில்லன்களை தேடும் நாயகனின் பயணத்தில் அவரையும் பங்குபெற வைத்திருக்கலாம்.
கால் டாக்சியினர் பற்றிய இலக்காரமான சிந்தனையை இப்படம் மாற்றும் அளவிற்கான வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
நான் கடவுள் ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட காட்சிகளை இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.
பட ஆக்கம் மிகவும் சுமார் தான் என்றாலும், யாரும் எதிர்பாராத வகையில் பாதிக்கப்பட்ட ஒரு திருநங்கையை வைத்து வில்லனை பழிதீர்க்க வைத்து பாராட்டுகளை அள்ளி விடுகிறார் இயக்குநர் பா.பாண்டியன்.
கால் டாக்சி, ஓடும்!