a K.Vijay Anandh review
குட்டி குட்டி ஸ்டோரீஸ் என்று கூட தலைப்பு வைத்திருக்கலாம். இளம் இயக்கு நர் நலன் குமாரசாமி ஜாம்பவான் இயக்கு நர்கள் கெளதம் வாசுதேவமேனன், வெங்கட்பிரபு மற்றும் ஏ எல் விஜய் ஆகியோர் தனித்தனியாக இயக்கிய நான்கு குட்டி கதைகளின் கதம்பமாக வெளிவந்திருக்கும் படம் குட்டி ஸ்டோரி.
எதிர்பாரா முத்தம், தலைப்பைக் கேட்டவுடனேயே முடிவுக்கு வந்துவிடலாம். ஆம், இதனை கெளதம் வாசுதேவமேனன் தான் இயக்கியிருக்கிறார். கதையாக அவரிடம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென்றாலும் பட ஆக்கத்தில் ஒரு குட்டி பாடமே நடத்தியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. குறிப்பாக, ரோபோ ஷங்கர் உடனான அவரது உரையாடல்கள் - மிகவும் சரளம், மிகவும் யதார்த்தம். ரோபோ ஷங்கரும், இள வயது கெளதம் வாசுதேவமேனனாக வரும் வினோத்தும் கவனம் ஈர்க்கிறார்கள், குறிப்பாக கெளதம் வாசுதேவ மேனன் உடல்மொழிகளை அப்படியே பிரதிபலித்திருக்கும் வினோத்.
அவனும் நானும் படத்தை ஏ எல் விஜயிடம் பயிற்சி எடுக்கும் உதவி இயக்குநரே இயக்கியிருக்க முடியும். அந்தளவிற்கு, ஏல் எல் விஜய் தேந்தெடுத்த கதைக்களமும் பட ஆக்கமும் அருமை என்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றதே!
பேப்பரைத் திறந்தாலே கள்ளத்தொடர்பு செய்திகள் தாம், அந்தளவுக்கு சமூகம் சீரழிந்து கிடக்கிறது. அதில், ஆணுக்கு அதிக அட்வாண்டேஜும், பெண்ணின் உரிமை மிகவும் குறைவாகவும் இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. தப்பு செய்யிறதுல என்னங்கடா ஏற்றத்தாழ்வு, தப்பு செஞ்சுட்டு வெறுமனே சாரி கேட்டா பாவ மன்னிப்பு கிடைச்சுடம்னா , நான் ஏற்கனவே செஞ்ச தப்புக்கும் சாரி கேட்டுக்கிறேன் என்று அதிரடியாக அதிதி சொல்ல , அதைத்தொடர்ந்து விஜயசேதுபதியின் மூளை தாறுமாறாக வேலை செய்து, ஒரு முடிவுக்கு வருவது தான் நலன் குமாரசாமியின் ஆடல்பாடல். ஒரு , சுவராஸ்யத்தைக் கொடுக்கவே செய்கிறது.
கொஞ்சம் வித்தியாசமாக யோசித்திருக்கிறார் வெங்கட்பிரபு, புளூவேல் விளையாடி தற்கொலை செய்துகொள்கிறான் என்றால், லோகம் பார்த்து காதலில் விழுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதாகத் தான் இருக்கிறது. வீடியோ கேமுக்குள்ளாகவே அனிமேஷன் கதாபாத்திரங்களாக கதையை நகர்த்தியிருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. கதையை முடிக்கும் நேரம், ஒரு காதலை தொடங்கி வைத்திருக்கலாம், கடற்கரையில் சங்கீதாவுக்கும் - மடோனாவுக்கும் இடையே நடக்கும் நீண்ட மியூட் செய்யப்பட்ட வாக்குவாதங்களையடுத்து, ஸ்டேஜ் 4 புற்று நோய் தாங்கியிருக்கும் சங்கீதாவிற்கு பதிலாக, லூசுப்பயலே என்று மடோனா ஒரு புதிய இன்னிங்ஸை தொடங்கியிருக்கலாம். சங்கீதாவுக்கு ஆறுதலும் கிடைத்திருக்கும், வருணுக்கு காதலும் கிடைத்திருக்கும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
மற்றபடி, கொரானா நேரத்திலும் திரைத்துறையினருக்கு வேலைவாய்ப்பு கொடுத்த விதத்தில் வேல்ஸ் பிலிம்ஸுக்கு பாராட்டுகள்.
குட்டி ஸ்டோரி - குட்டி திருப்தி!
-