a K.Vijay Anandh review
பொதுவாக, கதா நாயகர்களுக்கு வில்லன்கள் வீட்டிற்கு வெளியே இருப்பார்கள். நம்ம கானா பாடகர் பாரிஸ் ஜெயராஜ் - சந்தானத்திற்கு வீட்டிற்குள்ளேயே வில்லன். அதுவும் அவரது அப்பா, பாரிஸ்-செங்கல்பட்டு-பூவிருந்தவல்லி ஆகிய கோர்டுகளுக்கு பறந்து பறந்து சென்று வாதிடும் வக்கீல் பிரகாஷ்ராஜ் - பிரிதிவி ராஜ்.
பிரிதிவிராஜ், தெலுங்கில் இருந்து வந்திருக்கிறார். “ ஆடுகளம் நரேனுக்கு சைக்கிள் பம்ப்ல காத்தடிச்ச மூஞ்சி மாரி இருந்துட்டு, இன்னா வேல பாக்குற நைனா..” அப்படின்னு ஒரு வசனத்தை சந்தானம் வாயில் இருந்து எதிர்பார்த்து ஏமாந்தது ஒன்றைத்தவிர, படம் முழுவதும் அட்டகாசமான பொழுது போக்கு.
கல்லூரி, வீட்டு விசேஷம் எதுவாக இருந்தாலும் விரும்பி அழைக்கப்படும் கானா பாடகராக சந்தானம் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இசையிலும், சாண்டியின் நடன அசைவுகளிலும் சந்தானம் பாடி ஆடும் கானா பாடல்களைப் பார்க்கும் போது, வாத்தி கமிங்கை விட கொஞ்சம் தூக்கலாகவே நம்மை ஆடத்தூண்டுகிறது.
ஒரு சாயலுக்கு- நவீன - நான் தான் சகலகலாவல்லவன் கமல்ஹாசன் மாதிரியே இருக்கிறார் சந்தானம். குறிப்பாக விவாந்த் பிறந்த நாள் நிகழ்ச்சியில் அவர் கானா பாடலைப் பாடி ஆடும் போது, அட ரொம்பவும் அட்வான்ஸாக யோசித்து படம் எடுக்கும் நம்ம உலக நாயகன் உள்ளூர் கானா வை எப்படி கதைக்களமாக அமைக்காமல் விட்டுவிட்டார் என்று நினைக்கத்தோன்றும் அளவிற்கு இருந்தது.
கட்சில, உங்கப்பா பேரு என்ன அவரு போட்டாக்காமின்னு கேட்டு வாங்கி கன்பர்ம் செஞ்சுட்டுதான் காதலிக்கவே வேண்டிய நிலைமை. அது ஏன் ? எதுக்கு..? என்று திரையில் பார்த்து ரசியுங்கள்.
கல்கி உள்ளிட்ட நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
வொர்த் இல்ல வொர்த் இல்லனு பிரஸ் மீட்டுல புலம்பின ஜான்சன், வொண்டர்புல்லான ஒரு நகைச்சுவை படமாக பாரிஸ் ஜெயராஜை இயக்கியிருக்கிறார்.