a K.Vijay Anandh review
Documentary க்களுக்கென்று இந்தியாவுக்கு வெளியே ஒரு பெரிய சந்தை இருக்கின்றது. எடுத்துக் கொண்ட விஷய ங்ககுக்கு ஏற்ப அவை, ஒரு வெகுஜன சினிமாவை விட வசூலில் சாதனை படைத்தும்,விடும்.
இந்திய, குறிப்பாக தமிழ் சினிமாவைப் பொருத்தவரை அது அரிதினும் அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சர்வதேசத்தின் கவனங்களைக் குவித்த 2017 இல் நடைபெற்ற சல்லிக் கட்டு போராட்டத்தை மெரினா புரட்சி என்கிற தலைப்பில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
வணிக சினிமாக்களில் சொல்லப்படும் விஷயங்களின் நம்பகத்தன்மை, 0.00001% கூட இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை.
அதே நேரம், ஆவணப்பட ங்கள் என்று வரும் போது 100% நம்பகத்தன்மை இருக்கவேண்டியது அவசியம். கொஞ்சம் பிசகினாலும், ஒரு சாராருக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ என்று பிரச்சாரப் படமாக அமைந்துவிடும்.
ஜனநாயக நாடு என்று என்னதான் மார்தட்டிக் கொண்டாலும், இந்தியாவில் உள்ளதை உள்ளபடியே சொல்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
அந்த நிலையிலும், சர்வதேச கிறுத்துவ.மதவெறியுடன் கூடிய வணிக அரசியல், அவர்களின் ஆசைகளுக்குத் தீனிபோடும் அன்றைய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசியலின் கோரமுகத்தை கோடிட்டு காட்டியதில் தனித்து நிற்கிறார் இயக்குநர்.
இங்கே ஒரு குத்து, அங்கே ஒரு குத்து என்பது போல, தமிழகத்தில் இருந்து எவ்வளவு அடிச்சாலும் தாங்குவார்கள் என்கிற நிலையில் இருக்கும் பிஜேபி மீதும் ஒரு குத்து குத்தியிருக்கிறார்கள்.
மிகவும் எளிதான சூட்சுமம் தான், இந்தப் போராட்டத்தில் எவன் தோற்றானோ அவனது அடிமைகளாக அதிகாரவர்க்கத்தில் இருக்கும் குள்ள நரிகளால் தான் போராட்டத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த முடியும், அதற்கான அவசியமும் அவனுக்குத்தான் இருக்கிறது என்பதை இந்த ஆவணப்படம் பார்ப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
ராஜ்மோகனின் தொலைக்காட்சிக்கு நேர்காணலுக்கு வருபவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரீடசையாகவும் அதனைத் தொடர்ந்த கலந்துரையாடல் களுக்கிடையேயுமாக ஆவணப்படுத்திய விதம் அருமை. அனைவரும், சிறப்பாக இயல்பாக தோன்றியிருக்கிறார்கள்.
சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த நூற்றாண்டின் பிரபஞ்சத்தின் மிகப்பிரமாண்டமான மெரினா புரட்சியை ஆவணப்படுத்திய குழுவினர்க்குப் பாராட்டுகள்.