a K Vijay Anandh review
வித்தியாசமான கிரைம் திரில்லர் Crime Thriller உம் டார்க் காமெடி Dark comedy உம் கலந்த காக்டெயில் சூப்பர் டூப்பர்.
நாயகன் துருவா, நம்ம நட்டியும் விஷ்ணு விஷாலும் கலந்த கலவையாக இன்னொரு நம்பிக்கை நட்சத்திரமாகக் குறிப்பாக இந்த வகைப் படங்களுக்கு மட்டுமல்ல ரொமாண்டிக் ஆக்ஷன் வகைப்படங்களுக்கும் ஏற்ற உடல்வாகு/மொழி, எந்த வித தவறும் இல்லாத நடிப்பு என்று மிளிர்கிறார்.
இந்துஜா, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மகாமுனியை விட இதில் அவருக்கு நல்ல வாய்ப்பு, கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார், கிட்டத்தட்ட பில்லா நயன் தாரா அளவிற்குப் பெயர் வாங்கிவிடுகிறார். முழுமையான லேடி சூப்பர் ஸ்டார் ஆவதற்கான எல்லாத் தகுதிகளோடும் பட்டையக்கிளப்புகிறார். நடனம் ஆடும் போது காட்டும் அட்டகாசமான முகபாவனைகளையும் உடல்மொழியையும் வசனங்கள் பேசி நடிக்கும் போதும் காட்டிவிட்டார் என்றால், பெரிய ரவுண்டு Round வருவார்.
சிவா ஷா ரா, குறிப்பிட்ட கால இடைவெளியில் நல்ல நகைச்சுவை நடிகர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அந்தவகையில், ஷா ரா நம்பிக்கை நட்சத்திரமாக அடியெடுத்து வைத்திருக்கிறார், விக்ரம் என்கிற என்கவுண்டர் Encounter Specialist ஸ்பெஷலிஸ்டுக்கும் அவரையே போடுவோம் என்று இயக்குநர் முடிவெடுக்கும் அளவிற்கு. நடுவில், வேதா என்கிற ரவுடியின் Rowdy அடியாள் மாமா ஷா ராவைப் போட முயலும் காட்சி அடல்ட் ஒன்லி Adult Only வகை.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி நாகராஜன் கண்ணனைச் சுற்றித்தான் கதை. அவரது வீட்டிலேயே அதிபயங்கர வில்லன் மைக்கேல் ( ஆதித்யா ஷிவ்பிங்) உருவாவது உச்சக்கட்ட அதிர்ச்சி தரக்கூடிய திரைக்கதை. ஆதித்யா ஷிவின் , Change over ரசிக்கும் படி இருக்கிறது.
தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஆகிய ஒளிப்பதிவாளர்களும், திவாகரா தியாகராஜனின் இசையும், ஸ்டன்னர் ஷாமின் சண்டைக்காட்சிகளும் இயக்குநர் ஏகே வுக்கு நன்றாகவே கைகொடுத்துள்ளன.
சூப்பர் டூப்பர், படத்தில் வரும் இந்தப் பெயருக்கான காரணமே ரசிக்க முடிகிறது.
இந்தப்படத்திற்கெல்லாம் காட்சிக்குக் காட்சி கதை சொல்லிக் கொண்டிருக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு கதைக்களத்தை நம்பி தயாரித்த ஷாலினி வாசனின் கை(பை)யைக் கடிக்காது, சூப்பர் டூப்பர்.
சூப்பர் டூப்பர் அணியினருக்கு சூப்பர் டூப்பர் எதிர்காலம் காத்திருக்கிறது, மெனக்கெடல்களின் அளவைக் கூட்டிக்கொண்டே இருந்தால்.