கணவர் டெல்லி கணேஷை இழந்த நிலையிலும் தனக்குப் பிடித்தமான சமூகத்தொடர்புகளுடன் வெள்ளந்தியாக வாழும் சச்சு. வயதானவர்களுக்கான அழகிப்போட்டிகளில் கூடக் கலந்துகொள்ளத் தயங்கமாட்டார்.
மகன் லிவிங்ஸ்டன், மருமகள் மற்றும் ஷில்பா மஞ்சு நாத்துடன் வாழ்ந்துவரும் அவர், மகன் கோபித்துக் கொண்டதையடுத்து வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இளமையாக இருக்கவேண்டும் என்கிற இவரது ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தி செய்யும் சரவண சுப்பையாவின் வி ஞ்ஞானிகள் இவரைக் கடத்திக் கொண்டுபோய், புதுவிதமான மருந்தைச் செலுத்தி, இளமையாக்கிவிடுகிறார்கள்.
தனது பேத்தி ஷில்பா மஞ்சு நாத் போலவே மாறிவிடும் சச்சு பண்ணும் அதகளம் தான் பேரழகி ஐ எஸ் ஓ.
ஷில்பா மஞ்சுநாத், ஒரு வசீகரிக்கும் நடிகை என்பதை இதில் மீண்டும் நிரூபித்து விடுகிறார். எதுவுமே தெரியாதவராய் வீட்டில் ஒரு கதாபாத்திரமும் இளமையான சச்சுவாகவும் வந்து அசத்துகிறார்.
இவரை எப்படியாவது ஒரு புகைப்படம் எடுத்துவிட வேண்டும் என்று துடிக்கும் நாயகன் விவேக் ராஜ். யாரென்று தெரியாமல் சச்சுவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
ஆய்வகத்தில் இளமையாக மாற்றி வெளி நாடுகளுக்கு அனுபவதற்காகப் பல கிழவிகளைக் கடத்துவது நகைச்சுவை.
கிளைமாக்ஸில் ஒரு நல்ல செய்தியைச் சொல்லியிருக்கலாம், அப்படியே முடித்துவிடுகிறார் இயக்குநர் சி விஜயன். ஆனாலும், தவறு செய்பவர்களைக் காவல்துறை பிடித்துச் செல்வது, மிகப்பெரிய ஆறுதல்.
பேரழகி ஐ எஸ் ஓ, பட ஆக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், பொழுதைப் போக்குகிறாள்.