a K Vijay Anandh review
ஒரு பெண்ணின் கோணத்தில் படத்தை ஆரம்பிக்க ஒரு துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலுக்காக மட்டும் சிவி குமாரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
கொஞ்ச நேரமே வந்தாலும், அசோக் குமார் அவ்வளவு அழகு, துறுதுறு. ஹீரோயினைக் கொன்றுவிட்டால் பழிவாங்கும் ஹீரோ என்கிற அரதப்பழசான ஆணாதிக்க தமிழ் சினிமாவில் இருந்து மாறுபட்டு, ஹீரோவைக் கொல்லும் கயவர்களைப் பழிவாங்கும் ஹீரோயின் என்கிற ஒருவரிக்கதைக்கும் பாராட்டுகள்.
ஆனால், திரைக்கதை..?
அவ்வளவு கொடூரம் ஏன்..?
ஒரு கொடூர மனப்பான்மை கொண்ட குழந்தை தன் சக குழந்தைகளுக்குச் சொல்லும் கதையாகத்தான் இருக்கிறது கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்.
இன்னும் சொல்லபோனால், கபீரை அவ்வளவு கொடூரமாகக் கொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், அசோக்கை என்கவுண்டர் செய்வதில் அவருக்கு விருப்பமிருந்திருக்கவில்லை. சரி, அவர்களது அடியாட்களையும் அவ்வளவு கொடூரமாகக் கொல்லவேண்டுமா.?
கொடூரம் கொடூரம் படத்தில் இரத்தத்தை தெறிக்கவிட்டு, பார்ப்பவர்களின் இரத்தத்தை உறைய வைத்திருக்கிறார்கள்.
பிரியங்கா , டேனியல் பாலாஜியிடம் எடுத்துக் கொள்ளும் Training சிரிப்பு மூட்டுகிறது.
பொதுவாக, தனது நிறுவனத்தில் படங்கள் இயக்கும் மற்றவர்களின் கதையைப் பார்த்துப் பார்த்து திரும்பத்திரும்ப கேட்டு கேட்டு தேர்ந்துடுத்து நல்ல படங்களைக் கொடுக்கும் சிவி குமார், தானே நடித்து இயக்கியிருக்கும் கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸில் சறுக்கியிருக்கிறார்