a K Vijay Anandh review
தன்னை விபத்தில் இருந்து மீட்டு ராக்கி எனும் பெயரிட்டுப் பிள்ளையைப் போல வளர்க்கும் காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி ஈஷான்ய மஹேஸ்வரிக்கு ஒரு மகனாகவே மாறிப்போய்விடும் ஒரு ஜெர்மன் ஷெப்பர்டின் கதைதான் ராக்கி தி ரிவென்ஞ் Rocky, The Revenge
தன்னை வளர்த்து ஆளாக்கிய ஸ்ரீகாந்த், சக காவல்துறை கருப்பாடுகள் உதவியுடன் வில்லன்கள் ஓ ஏ கே தேவர் மற்றும் சாயாஜி ஷிண்டே வால் கொல்லப்பட, அத்தனை பேரையும் பழிவாங்குகிறது ராக்கி.
நாய்ப்பயிற்சியாளராக எம் எஸ் பாஸ்கரின் குரலாக ஒலிக்கும் பிரம்மானந்தம் கலகலப்பூட்டுகிறார்.
ஸ்ரீகாந்தின் நேர்மையான காவல்துறை உயரதிகாரியாக வரும் நாசரும் அட்டகாசப்படுத்துகிறார்.
நாயுடன் நடிப்பது சுலபம். ஆனால், அதனுடன் சண்டைபோட்டு – கட்டிப்புரள்வதற்கெல்லாம் அசாத்திய துணிச்சல் வேண்டும், என்னதான் பழக்கப்படுத்திய நாயாக இருந்தாலும்.
அந்த வகையில், கராத்தே ராஜா, சாயாஜி ஷிண்டே மற்றும் ஓ ஏ கே தேவர் முதலானோர் பாராட்டுக்குரியவர்கள்.
ராக்கியின் இரட்டையும் ராக்கியும் சந்தித்துக் கொள்ளும் காட்சியில் கைதட்டல் பறக்கிறது.
மிருகங்களை வைத்து தமிழில் படங்கள் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ராக்கி தி ரிவென் ஜை தமிழ் ரசிகர்களுக்காக இயக்கியிருக்கிறார் கே சி பொக்காடியா..
என்னதான் பப்பி லஹரி இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில் , ஆட்டுக்கார அலமேலு மாதிரி முயற்சி செய்திருந்தால், இன்னும் வசீகரித்திருக்கும் , ராக்கி.