a K Vijay Anandh review
குப்பத்து ராஜா, ஒரு நடன இயக்குநர் இப்படி ஒரு அழுத்தமான படத்தைக் கொடுக்கமுடியுமா என்கிற அளவிற்கு இறங்கி அடித்திருக்கிறார் பாபா பாஸ்கர்.
தனுஷுக்குப் பல வடசென்னைகள் என்றால், ஜீவி பிரகாஷின் வடசென்னையாக குப்பத்து ராஜா. சொல்லப்போனால், இவர் குப்பத்து இளவரசன் தான், ராஜா என்னவோ அது பார்த்திபன் தான். ஜீபி பிரகாஷ் கன்னத்தில் அறையும் போதும் சரி, ஜீவி பிரகாஷிடமிருந்து அறை வாங்கும் போதும் சரி, பார்த்திபன் ஒரு ராஜா தான்.
அந்தக்குப்பத்தில் அப்படித்தான், அழுக்கும் ( மனதில் அல்ல ) மக்கள் அடர்த்தியும் நிறைந்த அந்த மக்களின் வாழ்க்கையை அப்படியே சொல்லியிருக்கிறார், பாபா பாஸ்கர்.
எதற்கெடுத்தாலும் வாரி வழங்கும் போதே தெரிகிறது, இந்த சேட்டு தான் டா கடைசியில் வில்லனாகப் போகிறான் என்பது. டூப்ளிகேட் Duplicate மிட்டாய்களுடன் original ஒரிஜினலான போதை மிட்டாயும் தயாரிக்கும் பேக்டரி Factory, அதுவும் அந்தக்குப்பத்து மக்களை வைத்தே!
கடலை மிட்டாயும் ,பொரிஉருண்டை தவிர எதையும் சாப்பிடக்கூடாது மக்களே என்கிற அளவிற்கு நிஜமாகப் பயமுறுத்தியிருக்கிறார்கள்.
ஜீ வி பிரகாஷ், ராக்கெட்டாக படம் முழுக்க ரவுசு காட்டியிருக்கிறார். பூனமுடனான மோதல்களிலும் பாலக் லால்வாணியுடனான காதலிலும் வசீகரிக்கிறார் என்றால், யோகி பாபு மற்றும் சகாக்களுடன் இவர் அடிக்கும் லூட்டி கலகலப்பு. அதிலும் , யோகிபாபு வின் டைமிங் இந்தப்படத்தில் கொஞ்சம் அதிரடியாகவே இருக்கிறது, குறிப்பாக பார்த்திபனையே கலாய்க்கும் இடங்களில்.
பாலக் லால்வாணி, அடேங்கப்பா, ஜாங்கிரி மதுமிதாவுடன் இணைந்து அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஜீவி பிராகாஷிடம் உருகும் இடங்கள், பூனமுடம் உறுமும் இடங்கள், அம்மாவிடம் உதைவாங்கும் இடங்கள் என்று குப்பத்து ராணியாக ஜொலிக்கிறார்.
நெடுநல்வாடையில் கலக்கிய அந்தச் சிறுவன் , இதிலும் அட்டகாசப்படுத்தியிருக்கிறான், போட்டுக்கொடுத்தே மீட்டர் போடும் இடங்கள் அருமை.
பிஸ்கோத்துப் பேரு என்று பூனமை கலாய்க்கும் இடத்தில் ஆகட்டும், மகனுக்கான நாயகி அம்மாவுடன் மல்லுக்கட்டும் இடமாகட்டும், எம் எஸ் பாஸ்கர், இதில் ஊர்நாயமாகவே வாழ்ந்து செத்துப் போகிறார்.
வழக்கம்போல, மொள்ளமாரி அரசியல்வாதியாக கிரண், அசத்தியிருக்கிறார்.
குப்பத்து ராஜாவின் கதையின் மையப்புள்ளி எம் எஸ் பாஸ்கரின் மரணம் தான், முதல்பாகத்தை ஒரு பிளாஷ்பேக்காகவும் இரண்டாம் பாகத்தை லைவ் வாகவும் சொல்ல முற்பட்டிருந்தால், குப்பத்துராஜா இன்னும் கொஞ்சம் நல்லபடமாகவே இருந்திருக்கலாம்.